மாருதியின் நெக்ஸா ஷோரூம் மற்றும் மாருதி டீலர்ஷிப் - விரிவான ஒப்பீடு
மாருதி நிறுவன தயாரிப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, நெக்ஸா ஷோரூம் மற்றும் மாருதி டீலர்ஷிப் குறித்து சில குழப்பங்கள் இருக்க வாய்ப்புகள்
உள்ளது.
மாருதியின் நெக்ஸா ஷோரூம் மற்றும் மாருதி டீலர்ஷிப் உள்ளிட்டவற்றிற்கான வித்தியாசங்கள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் தான் மாருதி நிறுவனத்தின் வருங்காலமா?
இது குறித்த தகவல்களை விவரமாக தெரிந்து கொள்வோம்.
அம்சங்கள்;
நெக்ஸா ஷோரூம்;
மாருதி நெக்ஸா ஷோரூம்கள், பிரிமியம் தன்மை கொண்டவையாக உள்ளது. மாருதி நிறுவனம், இந்த வகையிலான ஷோரூம்களை நிறுவ காரணமே, மாருதி நிறுவனம் பிரிமியம் செக்மெண்ட்டில் நீண்ட காலமாக நன்கு ஷோபிக்கவில்லை.
இந்த நெக்ஸா ஷோரூம்கள் டிஜிட்டல் அனுபவங்கள் வழங்க வல்லதாக உள்ளது. இங்கு கார் கான்ஃபிகுரேட்டர், மிர்ரரிங் ஸ்கீரின்கள், டேப்லட் உள்ளிட்டவை மூலம் கார்களை டிஜிட்டல் முறையில் உணர முடியும்.
நெக்ஸா ஷோரூம்களில் ஒரு பிரத்யேக ஆப் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் முழு சரித்திரம், எமர்ஜென்ஸி உதவிகள், ஆக்சஸரீஸ் வாங்குதல், நிகழ்வுகள் குறித்த குறிப்புகள், புக்கிங் மற்றும் சர்வீஸ் வேண்டுகோள்கள் ஆகியவற்றை நிர்வகித்து கொள்ளலாம்.

மேலும், நெக்ஸா ஷோரூம்கள் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் கூகிள்+, வைன், இன்ஸ்டாகிராம், பிண்ட்ரெஸ்ட் ஆகியவற்றில் மிக மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் நெக்ஸா ஷோரூம்களின் நடவடிக்கைகளுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடிகிறது.
மாருதி டீலர்ஷிப்;
விற்பனை மற்றும் சர்வீஸ் என்று எடுத்துக்கொண்டால், மாருதி டீலர்ஷிப்கள் தான், மாருதி நிறுவனத்தின் முதுகு எலும்பு போல் செயல்படுகிறது. உண்மையில், தற்போது உள்ள மாருதி நெக்ஸா டீலர்ஷிப்களும் கூட, மாருதி டீலர்ஷிப்களில் இருந்து தான் தேர்வு செய்யபட்டனர்.
மாருதி நெக்ஸா டீலர்ஷிப்களின் தேர்வுக்காக இந்தியா முழுவதிலும் இருந்து 300 விண்ணப்பங்கள் வரவேற்கபட்டது. இதில் இருந்து, மாருதி நிறுவனத்தின் முதல் பட்டியல் கொண்ட நெக்ஸா ஷோரூம்கள் திறக்க அனுமதிக்கபட்டனர்.
மாருதி நிறுவனத்தின், மொத்த தயாரிப்புகளுக்கும் மாருதி மாருதி டீலர்ஷிப்கள் தான் முக்கிய தூணாக விளங்குகின்றனர். மேலும், சர்வீஸ் செண்டர்கள் மற்றும் ஷோரூம்களின் எண்ணிக்கைகளின் படியும் மாருதி டீலர்ஷிப்கள் தான் முன்னணியில் உள்ளனர்.
மாருதி டீலர்ஷிப்களும், சமூக வலைதளங்களில் பிரவேசித்து, மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், நெக்ஸா ஷோரூம்கள் இந்தியா முழுவதிலும் பரவலாக பரவியுள்ளனர். ஆனால், மாருதி டீலர்ஷிப்கள் குறிப்பிட பூகோளப்பகுதிக்குள்ளேயே மையம் கொண்டுள்ளனர்.
கார்கள்;
தற்போதைய நிலையில், நெக்ஸா ஷோரும்களில் எஸ்-கிராஸ் மற்றும் பலேனோ ஹேட்ச்பேக் ஆகிய கார்கள் மட்டுமே விற்பனை செய்யபடுகிறது. ஆனால், மாருதி டீலர்ஷிப்களில், சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா உட்பட சுமார் 14 மாடல் கார்கள் விற்பனை செய்யபடுகிறது.
நெக்ஸா ஷோரும்களில் விற்கபடும் கார்களில் உள்ள ட்யூவல் ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக உள்ளன. ஆனால், மாருதி டீலர்ஷிப்களில் விற்கும் கார்களில் உள்ள அம்சங்கள், தேர்வு முறை அம்சங்களாக உள்ளன.
நெக்ஸா ஷோரும்களில் விற்கப்படும் கார்கள் சிக்மா, டெல்டா, ஆல்ஃபா மற்றும் ஸீட்டா என வகைபடுத்தபட்டுள்ளன. ஆனால், மாருதி டீலர்ஷிப்களில் உள்ள கார்கள், எல்எக்ஸ்/டிஐ, விஎக்ஸ்/டிஐ மற்றும் இசட்எக்ஸ்/டிஐ என்று வகைபடுத்தபட்டுள்ளது.
நெக்ஸா ஷோரூம்களில் விற்கபடும் கார்கள், மாருதி சுஸுகி பேட்ஜ் அல்லாமல், சுஸுகியின் பேட்ஜ் கொண்டிருக்கும். ஆனால், மாருதி மாருதி டீலர்ஷிப்களில் கிடைக்கும் கார்களில் மாருதி சுஸுகி பேட்ஜ் பொருத்தபட்டிருக்கும்.
இறுதி கருத்து;
நெக்ஸா ஷோரும்கள், பிரத்யேகமாக பிரிமியம் செக்மண்ட் கார்களுக்காகவே இயங்குகிறது. இங்கு விற்கபடும் கார்கள் சொகுசுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.
எனினும், நெக்ஸா ஷோரும்களுக்கு என எக்ஸ்குளூசிவ் ஷோரூம்கள் எதுவும் இல்லை. சர்வீஸ் தொடர்பான விஷயங்களுக்கும் இவை, மாருதி டீலர்ஷிப்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
மாருதி டீலர்ஷிப் ஷோரூம்களை பொருத்த வரை, இங்கு விற்கபடும் கார்கள் மிதமான விலை கொண்ட கார்கள் முதல் விட்டாரா ப்ரெஸ்ஸா போன்ற பிரிமியம் கார்களை நாடுபவர்களுக்குமாக உள்ளது.
மேலும், மாருதி டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்கப்படும் ஆக்சஸரீஸ்களின் விலைகள், நெக்ஸா ஷோரூம்களில் விற்கப்படும் ஆக்சஸரீஸ்களை காட்டிலும் விலை குறைந்ததாக உள்ளது.
மாருதி டீலர்ஷிப் சர்வீஸ் ஷோரூம்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. நெக்ஸா ஷோரும்களில் விற்கப்படும் கார்களும், மாருதி டீலர்ஷிப் சர்வீஸ் ஷோரூம்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது என்பது மறுக்கமுடியாத நிஜமாகும்.


Click it and Unblock the Notifications








