மாருதி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட்: 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரிலீசாகிறது!

By Ravichandran

பொலிவு கூட்டபட்ட புதிய மாருதி ஆல்டோ 800 கார் அடுத்த மாதம் நடைபெற இருக்கும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான வாகனங்கள் பங்கேற்க உள்ளது. இதில் அறிமுகம் செய்யபட உள்ள தி ஆல்டோ 800 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

மாருதி ஆல்டோ 800 தான், மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக இந்திய சந்தைகளில் வழங்கபடும் நுழைவு நிலை கார் ஆகும். 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஃபேஸ்லிஃப்ட் செய்யபட்ட மாருதி ஆல்டோ 800 காரும் அறிமுகம் செய்யபட உள்ளது.

பிற நிறுவன கார்களிடம் இருந்து எழும் போட்டிகளை சமாளிக்க, இந்த 2016 ஆண்டின் நுழைவு நிலை ஹேட்ச்பேக் காருக்கு ஏராளமான மேம்பாடுகள் வழங்கபட உள்ளது.

2016-ஆம் ஆண்டுக்கான மாற்றங்கள்;

2016-ஆம் ஆண்டுக்கான மாற்றங்கள்;

இந்திய சந்தைகளில் வழங்கபட உள்ள 2016-ஆம் ஆண்டுக்கான மாருதி ஆல்டோ 800 காருக்கு, சில மாற்றங்கள் செய்யபட உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம், ஃப்ரண்ட் (முன்) மற்றும் ரியர் (பின்) பம்பர்களை மறுவடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஹேட்ச்பேக்கின், எக்ஸ்டீரியர் டிசைனிலும் சில சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட உள்ளது.

புதிய இஞ்ஜின்?

புதிய இஞ்ஜின்?

மாருதி சுஸுகி நிறுவனம், புதிய ஆல்டோ 800 காருக்கு புதிய டீசல் இஞ்ஜின் பொருத்த உள்ளதாக வதந்திகள் வெளியாகிறது.

அனேகமாக, செலெரியோ மாடலில் உபயோகிக்கபடும் டீசல் இஞ்ஜினே, இந்த புதிய ஆல்டோ 800 காரிலும் பொருத்தபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்த புதிய 2016 மாருதி ஆல்டோ 800 காருக்கு, தேர்வு முறையிலான ஏஎம்டி (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸ் இணைக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எரிபொருள் திறன் அதிகரிப்பு?

எரிபொருள் திறன் அதிகரிப்பு?

இந்த மாருதி ஆல்டோ காரின் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்களின் திறனை கூட்டுவதற்கு மாருதி சுஸுகி இஞ்ஜினியர்கள் நோக்கம் கொண்டுள்ளனர்.

இதன் செக்மண்ட் வகையிலான கார்களிலேயே மிக அதிகமான மைலேஜ் (எரிபொருள் திறன்) கொண்ட வாகனங்களாக, இந்த மாருதி ஆல்டோ 800 காரை பரிமாற்றம் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

உயர் ரக கார்களுக்கான உணர்வுகளை வழங்கும் வகையில், புதிய மாருதி ஆல்டோ 800 காருக்கான இண்டீரியர் மாற்றி அமைக்கபட உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

வாடிக்கையாளர்களுக்கு தேர்வு முறையில், ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை, பேஸ் வேரியண்ட்களில் இருந்தே வழங்க மாருதி சுஸுகி நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

விலை;

விலை;

புதிய 2016 ஆல்டோ 800 ஹேட்ச்பேக் காரின் விலைகள், சுமார் 3 லட்சம் ரூபாயில் இருந்து துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Alto 800 Facelift is to be launched at the 2016 Auto Expo. To take on the rising competition from the competitors, the all-new facelift model will receive many updates. The Alto 800 hatchback is expected to receive mild cosmetic updates for the Indian market.
Story first published: Saturday, January 2, 2016, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X