ஆல்ட்டோ காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக் வசதி!

Written By:

மாருதி ஆல்ட்டோ காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக் உள்பட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அனைத்து கார்களிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது மாருதி கார் நிறுவனம். மாருதி சியாஸ், பலேனோ, எர்டிகா, டிசையர், வேகன் ஆர், செலிரியோ உள்ளிட்ட மாடல்களில் ஏர்பேக்குகள் மற்றும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்டது.

மாருதி ஆல்ட்டோ
 

இதனைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் கார் மாடல்களான மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களில் ஓட்டுனர் பக்த்திற்கான ஏர்பேக் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இடது பக்கத்திற்கான சைடு வியூ மிரரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்து வரும் மாருதி ஆல்ட்டோ கார் இந்தியாவின் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற பெருமைக்குரியது. இதுவரை 29 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 16, 2016, 10:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark