ஆட்டோமேடிக் கியருடன் அறிமுகமாகிறது மாருதி பலேனோ ஆர்எஸ்?

Written By: Krishna

கார் மார்க்கெட்டின் கிங் ஆஃப் கிங்காக விளங்கும் மாருதி நிறுவனம், தனது புதிய பலேனோ ஆர்எஸ் மாடலை எப்போது அறிமுகப்படுத்தப் போகிறது என்பதுதான் இப்போதைய ஆட்டோ மொபைல் உலகில் விவாதப் பொருளாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பலேனோ கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. விற்பனையும் கணிசமான அளவில் இருந்தது.

மாருதி பலேனோ ஆர்எஸ்
 

இந்ந நிலையில்தான் பலேனோ ஆர்எஸ் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது மாருதி நிறுவனம். சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அந்த புதிய மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல் திறன் ஆகியவை பலேனோ ஆர்எஸ் மாடலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த மாடலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் 1.0 லிட்டர் திறன் கொண்ட டர்போசார்ஜுடு (பூஸ்டர்ஜெட்) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 109 பிஎச்பி முறுக்கு விசை மற்றும் 160 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் இந்த எஞ்சினில் உள்ளது.

6 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனுடன் (ஸ்போர்ட் பெடல் ஸ்விஃப்டர்) இந்த

கார் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வசதிகளுடன் இந்தியச் சந்தையில் பலேனோ ஆர்எஸ் கால் பதிக்குமேயானால், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ, அபர்த் புன்ட்டோ ஆகிய மாடல் கார்களுக்கு அது சரியான சவாலாக விளங்கக் கூடும்.

புன்ட்டோ மாடலில் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி மட்டுமே உள்ளது. போலோ ஜிடி டிஎஸ்ஐ காரை எடுத்துக் கொண்டால் 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் ஆப்ஷன் உள்ளது. அதேவேளையில் புன்ட்டோ மற்றும் போலோவைக் காட்டிலும் விலை குறைவான மாடலாகவே பலேனோ ஆர்எஸ் இருக்கும் என்பதால், அதன் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப அதிக வாய்ப்புள்ளது.

மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள மாருதி நிறுவனம், ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு காரை அறிமுகப்படுத்தினால், அதற்கு நிச்சயம் வரவேற்பு காத்திருக்கும். அந்த வரிசையில் பலேனோ ஆர்எஸ் மாடல் காரும் இணையும் என நம்பலாம்.

English summary
Maruti Suzuki Baleno With Boosterjet Engine To Come With Paddle Shifters?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark