உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

By Saravana Rajan

அனைத்து அம்சங்களிலும் உலகின் சிறந்த கார் மாடல்களை WCOTY அமைப்பு ஆண்டுதோறும் தேர்வு செய்து அறிவித்து வருகிறது. பலவிதமான கோணங்களில் கார்களை ஆய்வு செய்து இந்த விருதுக்கு புதிய கார் மாடல்கள் தேர்வு செய்து அறிவிக்கப்படுகின்றன.

இந்த விருதை பெறுவது உலக அளவில் கவுரவத்தை பெற்றுத் தரும் என்பதுடன், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, விற்பனையிலும் உறுதுணையாக அமையும். இதனால், போட்டியும் கடுமையாக இருக்கும்.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள், பத்திரிக்கையாளர்கள் அடங்கிய 73 பேர் அடங்கிய நடுவர் குழு ஒவ்வொரு ரகத்திலும் சிறந்த கார் மாடலை தேர்வு செய்து அறிவிக்கும். எனவே, மிகவும் மதிப்புமிக்க விருதாகவும் இருக்கும்.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

இந்த நிலையில், 2017ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கார் மாடல்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதில், நகர்ப்புற பயன்பாட்டுக்கான ரகத்தில் சிறந்த காருக்கான பட்டியலில் இந்தியாவில் தயாராகும் மாருதி பலேனோ கார் இடம்பிடித்துள்ளது. அதேபோன்று, சுஸுகி இக்னிஸ் காரும் போட்டியில் களமிறங்கியிருக்கிறது.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

முதல் விதியாக, இந்த ரகத்திலான கார்கள் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மாடலாக இருக்க வேண்டும். தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற காராகவும், நடப்பு நிதி ஆண்டின் முடிவிற்குள் குறைந்தது இரண்டு கண்டங்களில் விற்பனையில் இருப்பதும் அவசியம் என்பவை சில அடிப்படை விதிகள்.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி பலேனோ. அடுத்ததாக, கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய கண்டத்திலும் சுஸுகி பிராண்டில் விற்பனைக்கு அறிமுகமானது பலேனோ கார்.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

அசத்தலான டிசைன், இடவசதி, நவீன தொழில்நுட்ப சமாச்சாரங்கள், நம்பகமான எஞ்சின் போன்றவை மாருதி பலேனோ காருக்கு பக்கபலமாக அமையும். இந்தியாவில் மாருதி பலேனோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் வருகிறது.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

ஐரோப்பாவில் சுஸுகி பிராண்டில் விற்பனையாகும் பலேனோ காரின் டீசல் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலிலும் விற்பனையாகிறது. அங்கு மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

இந்த நிலையில், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ ஆர்எஸ் கார் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது செயல்திறன் மிக்க மாடலாக இருக்கும் என்பதுடன், தோற்றத்திலும் மிரட்டலாக இருக்கும்.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

அதேபோன்று, மாருதி இக்னிஸ் கார் ஜப்பானை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அடுத்ததாக, ஐரோப்பிய மார்க்கெட்டிலும் சுஸுகி பிராண்டில் விற்பனைக்கு செல்கிறது.

 உலகின் சிறந்த கார் விருது போட்டியில் மேட் இன் இந்தியா மாருதி பலேனோ கார்!

சுஸுகி இக்னிஸ் கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், க்ராஸ்ஓவர் ரக டிசைன், 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை இக்னிஸ் காருக்கு வலுசேர்க்கும். அத்துடன், நவீன வசதிகளை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எஸ்விஎச்எஸ் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாகவும் வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno & Ignis Nominated For 2017 World Car Of The Year. Read in Tamil.
Story first published: Friday, October 14, 2016, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X