பட்ஜெட் எதிரொலி: மாருதி சுஸுகி கார்களின் விலை உயருகிறது
மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் தயாரிப்புகளின் விலைகளை கணிசமாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, கார் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விலைகளை உயர்த்தியுள்ளன அல்லது உயர்த்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் ஆகியவை கார்களின் விலைகளை உயர்த்துகிறது.
சில தினங்களுக்கு முன்பு தான், 2016-17-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜட் தாக்கல் செய்யபட்டது. இதில், "இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ்" என்ற வரி கூடுதலாக விதிக்கபடுகிறது. இதனால் தான், கார்களின் விலைகள் வேகமாக உயர்த்தபடுகிறது.

இந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனமும் தங்கள் நிறுவன தயாரிப்புகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை, மாடல்களை பொருத்து 1,441 ரூபாய் முதல் 34,494 ரூபாய் வரை உயர்த்துகிறது.
இந்த வரியானது, டீசல் உள்ளிட்ட எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தான் விதிக்கபடுகிறது. ஆனால், ஹைப்ரிட் சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் மற்றும் ஹைப்ரிட் எர்டிகா எஸ்ஹெச்விஎஸ் ஆகிய ஹைப்ரிட் மாடல்களுக்கு இந்த "இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ்" வரியில் இருந்து விளக்கபடுகிறது.
ஹைப்ரிட் வாகனங்களை தவிர, பிற மாருதி நிறுவன தயாரிப்புகளின் விலைகள் உயர்த்தபடுவது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








