மாருதி சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் கார்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு
மாருதி சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் கார்களின் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் குறைக்கபட்டுள்ளது.
சமீபத்தில் தான், ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. முன்னதாக, 24% என்ற அளவில் இருந்த சுங்க வரி, தற்போது 12.5% என்ற அளவிற்கு குறைக்கபட்டுள்ளது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம் வழங்கும் எஸ்ஹெச்விஎஸ் எனப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் பை சுஸுகி எனப்படும் வாகனங்களின் மீது மட்டும் இந்த சுங்க வரி குறைக்கபட்டுள்ளது. தங்களின் தயாரிப்பின் மீது கிடைத்த இந்த ஆதாயத்தை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அனைத்து மாருதி சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் வேரியண்ட்களின் மீதான விலைகளும் சுமார் 69,000 வரை குறைக்கபடுகிறது. பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகள் இரண்டுமே எஸ்ஹெச்விஎஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கபட உள்ளது. இது எரிபொருள் திறனை வெகுவாக அதிகரிக்கிறது.

சுஸுகி நிறுவனம், இனி தங்களின் அனைத்து பிரபலமான தயாரிப்புகளையும் எஸ்ஹெச்விஎஸ் தொழில்நுட்பத்துடன் வழங்க திட்டமிட்டுள்ளது. வெகு விரைவில், பலேனோ மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய மாடல்களும் கூட மிதமான ஹைப்ரிட் மேம்பாடுகளுடன் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்திய வாகன சந்தைகளில் நன்கு பிரபலமாக விற்று வரும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, எஸ்ஹெச்விஎஸ் தொழில்நுட்பம் கூடுதல் மதிப்பு சேர்க்க உள்ளது.

மாருதி எஸ்ஹெச்விஎஸ் ரேஞ்ச் வாகனங்களின் விலை விவரங்கள்;
மாருதி சுஸுகி சியாஸ் விடிஐ - 7.68 லட்சம் ரூபாய்
மாருதி சுஸுகி சியாஸ் விடிஐ (ஓ) - 7.82 லட்சம் ரூபாய்
மாருதி சுஸுகி சியாஸ் விடிஐ+ - 8.23 லட்சம் ரூபாய்
மாருதி சுஸுகி சியாஸ் இசட்டிஐ - 8.89 லட்சம் ரூபாய்
மாருதி சுஸுகி சியாஸ் இசட்டிஐ+ - 9.50 லட்சம் ரூபாய்
குறிப்பு; இங்கு குறிப்பிடபட்ட அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications








