மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி-யின் விலைகள் 2.05 லட்சம் ரூபாய் குறைப்பு

By Ravichandran

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி-யின் விலை, 2.05 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கபட்டுள்ளது.

விலை குறைக்கபட்டுள்ள மாருதி எஸ் க்ராஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி பற்றி...

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி பற்றி...

மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும், மிக திறன்மிக்க மாடல்களில் ஒன்றாக மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி விளங்குகிறது.

இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின் தேர்வுகள்;

எஞ்சின் தேர்வுகள்;

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி இரு டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் கொண்டிருக்கும் முதல் டீசல் மாடல், அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்ட மற்றொரு மாடல், அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ் விபரங்கள்;

கியர்பாக்ஸ் விபரங்கள்;

1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்-களையும், 1.6 லிட்டர் டீசல் மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்-களையும் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

மாருதி க்ராஸ்ஓவர் காரின் 1.3 லிட்டர் டீசல் மாடல், 0 முதல் 100 கிமீ வரையிலான வேகத்தை 13.2 வினாடிகளில் எட்டிவிடும்.

1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல், 0- 100 கிமீ 0 முதல் 100 கிமீ வரையிலான வேகத்தை 11.3 வினாடிகளிலும் எட்டிவிடும்.

மைலேஜ்;

மைலேஜ்;

எரிபொருள் திறன் விஷயத்தில், 1.3 லிட்டர் மாடல் லிட்டருக்கு 23.65 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் மாடல் ஒரு லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜையும் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்;

பாதுகாப்பு வசதிகள்;

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இதன் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர ஸ்டாண்டர்ட் அம்சம் போல் இடம்பெற்றுள்ளது.

இதில், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர் சிஸ்டம் உள்ளது.

மேலும், 16 இன்ச் அலாய் வீல்கள், க்ளைமேட் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்ஸ் போன்றவை பிற பாதுகாப்பு வசதிகளாக இருக்கலாம்.

ஸ்பெஷல் மாடல்;

ஸ்பெஷல் மாடல்;

இரு டீசல் மாடல்களும், ஒட்டுமொத்தமாக வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

1.3 லிட்டர் மாடல் சிக்மா, சிக்மா ஆப்ஷனல், டெல்ட்டா, ஸீட்டா, ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும், 1.6 லிட்டர் மாடல் டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி குறித்த விலை விவரங்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

மாடல் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்;

எஸ்-கிராஸ் 1.3 சிக்மா - 7,79,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.3 டெல்ட்டா - 8,49,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.3 ஸீட்டா - 9,59,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.3 ஆல்ஃபா - 10,29,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.6 டெல்ட்டா - 9,94,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.6 ஸீட்டா - 10,94,000 ரூபாய்

எஸ்-கிராஸ் 1.6 ஆல்ஃபா - 11,69,000 ரூபாய்

ஒப்பீடுகள் - 1

ஒப்பீடுகள் - 1

200 சிக்மா

பழைய விலை - 8,34,000 ரூபாய்

புதிய விலை - 7,79,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 55,000 ரூபாய்

200 டெல்ட்டா

பழைய விலை - 9,15,000 ரூபாய்

புதிய விலை - 8,49,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 66,000 ரூபாய்

200 ஸீட்டா

பழைய விலை - 9,99,000 ரூபாய்

புதிய விலை - 9,59,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 44,000 ரூபாய்

ஒப்பீடுகள் - 2;

ஒப்பீடுகள் - 2;

200 ஆல்ஃபா

பழைய விலை - 10,75,000 ரூபாய்

புதிய விலை - 10,29,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 46,000 ரூபாய்

320 டெல்ட்டா

பழைய விலை - 11,90,000 ரூபாய்

புதிய விலை - 9,94,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 2,05,000 ரூபாய்

ஒப்பீடுகள் - 3;

ஒப்பீடுகள் - 3;

320 ஸீட்டா

பழைய விலை - 12,99,000 ரூபாய்

புதிய விலை - 10,94,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 2,05,000 ரூபாய்

320 ஆல்ஃபா

பழைய விலை - 13,74,000 ரூபாய்

புதிய விலை - 11,69,000 ரூபாய்

விலை வித்தியாசம் - 2,05,000 ரூபாய்

ஒப்பீடுகள் - 3;

ஒப்பீடுகள் - 3;

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

விரைவில் வரும் மாருதி எஸ் கிராஸ் பற்றிய தெரியாத உண்மைகள்

இந்தியாவில் புதிய மாருதி எஸ் க்ராஸ் அறிமுகம் - எஞ்சின், மைலேஜ் விபரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, January 18, 2016, 15:45 [IST]
English summary
The Prices Maruti S-Cross SUV is reduced drastically by Maruti Suzuki. By the maximum, the prices are reduced upto 2,05,000 Rupees. The reduced prices are coming to effect immediately. This Price reduction is expected to boost sales of Maruti Suzuki.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+