மாருதி நிறுவனத்தின் நெக்ஸா சேவை மையங்கள் விரைவில் திறக்கபடும்
மாருதி கார் சொந்தகாரர்களுக்கு ஒரு இனிய செய்தி காத்திருக்கிறது. மாருதி நிறுவனம் விரைவில் எக்ஸ்குளுசிவ் நெக்ஸா சர்வீஸ் செண்டர்களை திறக்க உள்ளது.
மாருதி நிறுவனம் தங்களின் பிரிமியம் வாடிக்கையாளர்களுக்கு, வெகுஜன கார் மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பிரத்யேகதன்மை வழங்கும் நோக்கில் தான் நெக்ஸா ஷோரூம்களை திறந்தது. எனினும் இதற்கென நெக்ஸா ஷோரூம்களுக்கு என பிரத்யேக ஷோரூம்கள் இல்லாததால், வழக்கமான மாருதி ஷோரும்களிலேயே சர்வீஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக கார்கள் வாங்கிய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவிலேயே நெக்ஸா சர்வீஸ் செண்டர்களை திறக்க உள்ளது. நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக, எஸ்-கிராஸ் மற்றும் பலேனோ ஹேட்பேக் ஆகிய மாடல்கள் மட்டும் தான் விற்பனை செய்யபடுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் சேவை வழங்குவதற்காகவே, நெக்ஸா ஷோரூம்களை திறக்கபட்டது. அதே நோக்கத்தில் தான், நெக்ஸா சர்வீஸ் செண்டர்களும் திறக்கபட உள்ளது. ஆனால், நெக்ஸா ஷோரூம்கள் தொடர்பாக மாருதி நிறுவனம் ஏராளமான புகார்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சிலர், மோசமான சேவை உள்ளிட்ட பிரச்னையினால், பணத்தை திரும்ப வழங்க கோரினர். அல்லது வழக்கு தொடரப்படும் என்று எல்லாம் மிரட்டினர்.
நெக்ஸா சர்வீஸ் செண்டர்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் பெறுமா அல்லது நெக்ஸா ஷோரூம்கள் சந்தித்த அவபெயர் பெறும் நிலை தான் தொடருமா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








