மாருதி சுஸுகி நிறுவனம், 250 நெக்ஸா ஷோரூம்களை திறக்க திட்டம்

By Ravichandran

2017-ஆம் ஆண்டுக்குள், 250 நெக்ஸா ஷோரூம்களை நிறுவ மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் சில மாடல்களை விற்க, பிரத்யேகமாக நெக்ஸா ஷோரூம்களை நிறுவ துவங்கியது. கடந்த 6 மாதங்களில் மட்டும் நெக்ஸா மையங்கள் திறக்கபட்டுள்ளது.

maruti-suzuki-to-set-up-250-nexa-showrooms-very-soon

நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம், கடந்த ஆகஸ்ட் 2015 முதல் தற்போது வரை மட்டும் 45,000 கார்கள் விற்று முடிக்கபட்டுள்ளது.

புதிய டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் கொண்ட, கான்செப்ட் இக்னிஸ் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ஆகிய கார்களை விரைவில் வெளியிட போவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

maruti-suzuki-to-set-up-250-nexa-showrooms-shortly

"தற்போதைய நிலையில், நெக்ஸா ஷோரூம்கள் மூலம் மாருதி சுஸுகியின் விற்பனை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு வாக்கில், இந்த விற்பனையின் சதவிகிதம் 15 சதவிகிதமாக உயர்ந்துவிடும்.

2020-ஆம் ஆண்டு காலகட்டதிற்குள் சுமார் 400 நெக்ஸா ஷோரூம்கள் இயங்கும் நிலை ஏற்படும்" என எம்எஸ்ஐஎல் (மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்) நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆர்எஸ் கல்ஸி தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is planning to set up 250 Nexa Showrooms by 2017 end. In past six months alone, Maruti Suzuki has opened 100 Nexa outlets. Around 45,000 units were sold through Nexa dealerships since August 2015. As of now, 10% of Maruti Suzuki sales are happening through the Nexa chain.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X