மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மார்ச் 8-ல் விற்பனைக்கு வருகிறது!
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மார்ச் 8-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா பற்றி...
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி, இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கபடும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தான், மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபடும் 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட முதல் எஸ்யூவி ஆகும்.
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இஞ்ஜின்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி, சியாஸ் செடானுக்கு பொருத்தபட்டுள்ள அதே டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் 4,000 ஆர்பிஎம்களில் 89 பிஹெச்பியையும், 1,750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலமாக தான், முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

மைலேஜ்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, 28.09 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

முன் தோற்றம்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் முன் பகுதியில், குரோம் பூச்சு கொண்ட சிங்கிள் ஸ்லாட் கிரில் உள்ளது.
இதன் பக்கவாட்டில் புரொஜெக்டர் யூனிட்களாக விளங்கும் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைக்கபட்ட டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன.
மேலும், இதன் முன் பகுதியில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ரெய்ன் சென்ஸிங் வைப்பர்கள் உள்ளன.

பின் தோற்றம்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் ரியர் பகுதியில், ஒரு பெரிய குரோம் ஸ்ட்ரிப் உள்ளது. இதில் இந்த காரின் பெயர் அச்சிடபட்டுள்ளது. இதன் டெய்ல் லேம்ப்கள் சிறியதாகவும், ஆங்குலார் தோற்றம் கொண்டுள்ளது.

இண்டீரியர்;
மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் இண்டீரியர் பகுதியில், ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் உள்ளது.
மேலும், இதில் கூல்ட் க்ளவ்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

போட்டி கார்கள்;
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி-யானது, ஃபோர்ட் இகோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டியதாக இருக்கும்.

விலை;
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, சுமார் 7 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் படங்கள், தொழில்நுட்ப விபரங்கள்!
மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








