விட்டாரா பிரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் 6 மாதங்களாக உயர்வு

By Ravichandran

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 6 மாத காலம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, 2016 மார்ச்சில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. 2 மாத காலத்திற்குள், இந்த மாடலுக்கு சுமார் 55,000 புக்கிங் குவிந்துவிட்டது. இதனால், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டது.

maruti-vitara-brezza-compact-suv-waiting-period-of-6-months

மாருதி சுஸுகியின் புதிய மாடல்கள் அனைத்துமே விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. பாதிக்கும் மேற்பட்ட விற்பனை, சியாஸ் செடான், பலேனோ ஹேட்ச்பேக் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்கள் மூலம் தான் பதிவாகி வருகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படை வேரியன்ட்டின் விலை, சுமார் 6.99 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்தும், இதன் டாப் என்ட் வேரியன்ட் விலை சுமார் 9.68 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்தும் விற்கப்பட்டு வருகிறது. இந்திய சந்தைகளில், விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி 3OO ஆகிய மாடல்களுடன் போட்டி போட்டு வருகிறது.

maruti-vitara-brezza-compact-suv-waiting-period-upto-6-months

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் உற்பத்தியை அதிக அளவில் கூட்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு வருடத்திற்கு சுமார் 1,00,000 கார்கள் என்ற அளவில் விட்டாரா பிரெஸ்ஸா மாடல், தயாரிக்கபட்டு வருகிறது. எனினும், இதன் உற்பத்தி ஒரு வருடத்திற்கு 1,20,000 கார்கள் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விட்டாரா பிரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை குறைய வாய்ப்புகள் உள்ளது.

ஏப்ரல் 2016 காலகட்டத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 7,832 விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவிகளை விற்றுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மன்ட் ஆனது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும், தங்கள் தரப்பில் இருந்து, விற்பனையை கூட்டி கொள்ளும் முனைப்பில் உள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

விட்டாரா ப்ரெஸ்ஸாவின், 1 லிட்டர் டர்போசார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வு விரைவில் அறிமுகம்

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மார்ச் 8-ல் விற்பனைக்கு வருகிறது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலம், 6 மாதங்களாக உயர்வு

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, May 27, 2016, 12:40 [IST]
English summary
Waiting Period For Maruti Suzuki Vitara Brezza compact SUV goes up by 6 Months. Maruti Suzuki launched their Vitara Brezza in India during March 2016. In 2 months, compact SUV has raked in over 55,000 bookings. Hence, Vitara Brezza has waiting period of almost six months. So, Production has been increased to 1.2 lakh units, to reduce waiting period upto 2-3 months...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+