மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது- முழு விபரம்
ரூ.6.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி சற்றுமுன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி நிறுவனத்தால் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி, இதன் செக்மென்ட்டில் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்
எல்டிஐ, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ ப்ளஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பேஸ் மாடல்களின் ஆப்ஷனல் வேரியண்ட்டில் ஏர்பேக் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் பெற்றுக் கொள்ளலாம்.

டீசல் மாடல்
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

செயல்திறன் & மைலேஜ்
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 13.3 வினாடிகளில் எட்டிவிடும். லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசைன்
கடந்த 5 ஆண்டுகால மாருதி எஞ்சினியர்களின் உழைப்பில் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ஏ ஆல்ஃபா கான்செப்ட்டிலிருந்து அதிக டிசைன் தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல்நேர விளக்குகள், டாப் வேரியண்ட் இரட்டை வண்ணக் கலவையில் கிடைப்பது உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

வசதிகள்
நெடுஞ்சாலைகளில் சீரான வேகத்தில் பயணிக்க உதவும் க்ரூஸ் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்டர் கன்சோல், டியூவல் டோன் டேஷ்போர்டு, கூல்டு க்ளவ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், மழையை உணர்ந்து இயங்கும் தானியங்கி வைப்பர்கள் போன்ற பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு
பேஸ் மாடல்களிலிருந்தே டியூவல் ஏர்பேக்குகளையும், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. இதுதவிர, கீ லெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற பல முக்கிய வசதிகளை பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் டெயில் கேட் திறக்கும் வசதியும், 16 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்குட்பட்ட வலுவான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் கார் மாடலாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வண்ணங்கள்
ஆர்டிக் ஒயிட், கிரானைட் கிரே, செருலியன் புளூ, பிரிமியம் சில்வர், பிளேசிங் ரெட் மற்றும் ஃபியரி யெல்லோ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். தவிர, டாப் வேரியண்ட் இரட்டை வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. இரட்டை வண்ண ஆப்ஷனை பொறுத்தவரையில் ஆர்டிக் ஒயிட் மற்றும் செருலியன் புளூ என்ற ஆப்ஷனிலும், ஃபியரி யெல்லோ மற்றும் ஆர்டிக் ஒயிட் என்ற இரட்டை வண்ணத்திலும், பிளேஸிங் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் என்ற மூன்றாவது ஆப்ஷனிலும் கிடைக்கும்.

பூட் ரூம்
328 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியை கொண்டுள்ளது.

விலை விபரம்
எல்டிஐ: ரூ.6,99,000
எல்டிஐ ஆப்ஷனல்: ரூ.7,12,000
விடிஐ: ரூ.7,62,000
விடிஐ ஆப்ஷனல்: ரூ.7,75,000
இசட்டிஐ: ரூ.8,55,000
இசட்டிஐ ப்ளஸ்: ரூ.9,54,000
இசட்டிஐ ப்ளஸ்(இரட்டை வண்ணக் கலவை): ரூ.9,68,000
குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

டெலிவிரி
இந்த காரின் டெலிவிரியும் உடனடியாக துவங்கப்படுவதாக மாருதி தெரிவித்துள்ளது.

போட்டி
4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் மஹிந்திரா டியூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு இது நிச்சயம் கடும் போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








