அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

Written By:

எஸ்யூவி ரகத்தில் வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 50,000 பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி பிரெஸ்ஸா விரைவில் பெட்ரோல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் பேராவல் எழுந்துள்ளது.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அடுத்த ஆண்டு மே மாதம் மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் இந்த டீசல் எஞ்சின் பல கார்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், மிகவும் நம்பகத்தன்மை வாயந்ததாக இருக்கிறது.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சியாஸ் மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் இதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டிருப்பதால், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்தினால் சிறிய கார்களுக்கான வரைமுறையுடன் வரிச்சலுகை பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்துவதால், வரிச்சலுகையை பெறும் வாய்ப்பை இழக்கும்.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

இதனால், தற்போதுள்ள டீசல் பிரெஸ்ஸாவிற்கும், அடுத்த ஆண்டு வரும் பெட்ரோல் மாடலுக்கும் விலையில் அதிக வித்தியாசம் இருக்காது என்று கருதப்படுகிறது. இதுதவிர, விரைவில் விற்பனைக்கு வரும் மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினை பிரெஸ்ஸாவில் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

 அடுத்த ஆண்டு மே மாதம் அறிமுகமாகிறது மாருதி பிரெஸ்ஸாவின் பெட்ரோல் மாடல்!

பிரெஸ்ஸாவின் நேரடி போட்டி மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதேபோன்று, அதிக சக்திவாய்ந்த இந்த பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். விரைவில் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The much awaited petrol variant of the Maruti Suzuki's best-selling SUV, the Vitara Bezza is all set to launch in India by May 2017. Read in Tamil:
Story first published: Monday, October 17, 2016, 9:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos