விட்டாரா ப்ரெஸ்ஸாவின், 1 லிட்டர் டர்போசார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வு விரைவில் அறிமுகம்

By Ravichandran

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாக உள்ளது.

பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாக இருக்கும், விட்டாரா ப்ரெஸ்ஸா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1.0 லிட்டர் இஞ்ஜின்...

1.0 லிட்டர் இஞ்ஜின்...

டீசல் இஞ்ஜின் கொண்ட மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா சமீபத்தில் தான் அறிமுகம் செய்யபட்ட்து. தற்போது, இந்த மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாகிறது.

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் தேர்வு...

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் தேர்வு...

எந்த ஒரு எஸ்யூவிக்கும், அதிக டார்க் வெளிபடுத்தும் இஞ்ஜின் இருப்பது நல்லது. 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின், விட்டாரா ப்ரெஸ்ஸா

எஸ்யூவிக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.

இறக்குதி செய்யபடும் பூஸ்டர்ஜெட்...

இறக்குதி செய்யபடும் பூஸ்டர்ஜெட்...

தற்போதைய நிலையில், மாருதி நிறுவனம், சர்வதேச சந்தைகளுக்கான பலேனோ மாடலுக்காக பூஸ்டர்ஜெட் இஞ்ஜினை இறக்குமதி செய்து வருகின்றனர்.

"இதே போல், விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவிக்கும், பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இத்தகைய இஞ்ஜின்

உள்நாட்டு சந்தையில் உற்பத்தி செய்ய மிகுந்த செலவாகும்.

உள்நாட்டிலேயே இத்தகைய பூஸ்டர்ஜெட் இஞ்ஜினை தயாரிக்க வேண்டும் என்றால், ஒரு மாதத்திற்கு சுமார் 1,00,000 கார்களையாவது தயாரிக்க வேண்டும்.

தேவையை கருத்தில் கொண்டு, பூஸ்டர்ஜெட் இஞ்ஜினை இந்தியாவில் உற்பத்தி செய்யபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்" என மாருதி நிறுவனம் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவுக்கான புதிய 1.0 லிட்டர் இஞ்ஜின், டர்போ சார்ஜ்ட் 996 சிசி அளவிலான பெட்ரோல் இஞ்ஜினாக இருக்கும்.

இந்த இஞ்ஜின், 5,500 ஆர்பிஎம்களில் 110 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எரிபொருள் திறன்;

எரிபொருள் திறன்;

1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வெளியாக உள்ள மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் மைலேஜ், இதை இயக்குபவரை பொருத்தும், சாலை நிலைமைகளை பொருத்தும் வேறுபட வாய்ப்புகள் உள்ளது.

மாருதி நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடனான விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் மைலேஜ் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்ட முதல் 2 நாட்களில் 5600+ புக்கிங் குவிப்பு

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மார்ச் 8-ல் விற்பனைக்கு வருகிறது!

விட்டாரா ப்ரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Vitara Brezza would get 1.0-Litre Turbocharged BoosterJet Engine soon. Maruti's Vitara Brezza was recently launched only with a diesel engine option. It would get a 1.0-litre turbo petrol engine now. As of now, Boosterjet engine, will initially be imported. Maruti is working on improving fuel efficiency of 1.0-litre engine. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X