விட்டாரா பிரெஸ்ஸா 70,000+ புக்கிங் குவிப்பு, காத்திருப்பு காலமும் கூடியது

By Ravichandran

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, 70,000+ புக்கிங் குவித்து சாதனை படைத்துள்ளது. இத்துடன் இதன் காத்திருப்பு காலம், 9 மாதங்கள் என உயர்ந்துள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, இந்த 2016 மார்ச்சில் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. முன்னதாக, இது ஃ பிப்ரவரியில் நடைபெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

maruti-vitara-brezza-waiting-period-now-increased-to-9-months

அறிமுகமான 3 மாத காலத்திற்குள், விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, சுமார் 70,000+ புக்கிங் குவித்து சாதனை படைத்து வருகிறது.

இத்தகைய அபாரமான புக்கிங், மாருதி நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால், இதை வாங்க ஆசைப்படும் வாடிக்கையாளர்களுக்கு, இது சற்று கெட்ட செய்தியாக கூட இருக்கலாம். இதற்கு காரணம், இதன் காத்திருப்பு காலம், 9 மாதங்கள் வரை கூடியுள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் டாப்-என்ட் வேரியன்ட்களான இசட்டிஐ (ஓ) மற்றும் இசட்டிஐ+ மாடல்கள், புக்கிங் செய்த நாள் முதல் டெலிவரி கிடைக்க 9 மாதங்கள் ஆகலாம். பிற வேரியன்ட்கள், டெலிவரி கிடைக்க 6 மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

maruti-vitara-brezza-waiting-period-now-increased-upto-9-months

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டீசல் இஞ்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின்,
89 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கு, மாருதி நிறுவனம், ஆட்டோமேட்டிக் கியர்பாகஸ் தேர்வு முறையில் கூட வழங்கவில்லை.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி வேரியன்ட்களையும், அதன் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

maruti-vitara-brezza-waiting-period-now-increased-to-9-months-period

வேரியன்ட் - எல்டிஐ
விலை - 6.99 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - எல்டிஐ (ஆப்ஷனல்)
விலை - 7.12 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - விடிஐ
விலை - 7.62 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - விடிஐ (ஆப்ஷனல்)
விலை - 7.75 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - இசட்டிஐ
விலை - 8.55 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - இசட்டிஐ+
விலை - 9.54 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - இசட்டிஐ+ ட்யூவல் டோன்
விலை - 9.68 லட்சம் ரூபாய்

More from DriveSpark

Article Published On: Tuesday, May 31, 2016, 7:18 [IST]
English summary
Maruti Suzuki Vitara Brezza Compact SUV has recorded Over 70,000 Bookings. Vitara Brezza has registered over 70,000+ bookings. The top end variants of Brezza, the ZDi (O) and ZDi+ models will take upto 9 months to arrive once ordered. Other variants has 6 months of waiting period. To know more about Vitara Brezza Bookings and Waiting Period, check here..
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+