மும்பையில் மஸராட்டி நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறப்பு
மும்பையில் மஸராட்டி நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் சமீபத்தில் திறக்கபட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மஸராட்டி, தங்களின் ஷோருமை, மும்மை சாண்டா க்ரூஸ் விமான நிலைய பகுதிக்கு மிக அருகில் துவக்கியுள்ளனர். இது தான் மும்பையில் திறக்கபட்டுள்ள முதலாவது மஸராட்டி ஷோரூம் ஆகும். இந்த மும்பை ஷோரூமை சேர்த்து, இந்தியாவில் மொத்தம் 3 மஸராட்டி ஷோரூம்கள் இயங்குகிறது.
மும்பையில் அமைக்கபட்டிருக்கும் இந்த மஸராட்டி ஷோரூமை, குளோபல் பிளானட் பெடல் குரூப் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. குளோபல் பிளானட் பெடல் குரூப் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக உள்ள சுக்பீர் பாக்கா, இந்த புதிய ஷோரூமானது வாடிக்கையாளர்களுக்கு, அதி உயர்தரத்திலான சொகுசு அனுபவங்களை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
குளோபல் பிளானட் பெடல் குரூப் நடத்தும் இந்த ஷோருமில், மஸராட்டி நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் கிடைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், கிப்லி, க்வார்ட்டோபோர்ட்டே கிரான்கேப்ரியோ மற்றும் கிரான்டுரிஸ்மோ ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யபட்டு வருகிறது. சமீபத்தில் தான், மஸராட்டி நிறுவனம் தங்களின் லவாந்தே மாடலை இந்தியாவில் காட்சிபடுத்தியது. உலக அளவில் விற்கபடும் அனைத்து மாடல்களும், இந்திய சொகுசு வாகன சந்தையிலும் வழங்கபடுகிறது.
இத்தாலிய சொகுசு கார் நிறுவனமான மஸராட்டி, 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்களின் மறுபிரவேசத்தை அறிவித்தனர். இந்தியாவில் மறுபிரவேசம் செய்த ஒரே ஒரு ஆண்டிற்குள், 3 ஷோரூம்களை திறந்துவிட்டனர். மெல்ல மெல்ல மஸராட்டி நிறுவனம், இந்திய சொகுசு வாகன சந்தையில், தங்கள் தயாரிப்புகளை விற்பதன் அவசியத்தை உணர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








