மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் ஜுன் 2-ல் அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தாங்கள் வழங்கும் ஜிஎல்சி எஸ்யூவியை, இந்தியாவில் ஜுன் 2-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி...
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி ஆனது, ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்இ ஆகிய 2 மாடல்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க அறிமுகம் செய்யபடுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யும் கொள்கையினை வெகு தீவிரமாக கடைபிடித்து வருகின்றது.

இஞ்ஜின்;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி, தேர்வு முறையிலான பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

இந்தியாவிற்கான டீசல் மாடல்கள்;
இந்தியாவிற்கான டீசல் மாடல்கள்;
இந்திய வாகன சந்தைகளுக்காக ஜிஎல்சி 250டி, ஜிஎல்சி 220டி ஆகிய டீசல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெட்ரோல் மாடல்கள்;
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ஜிஎல்சி 200 என்ற ஒரே ஒற்றை மாடலை, இந்திய சந்தைகளுக்கான பெட்ரோல் மாடலாக அறிமுகம் செய்ய உள்ளது.

கியர்பாக்ஸ்;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல்களின் இஞ்ஜின் 9-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டுள்ளது.

4 மேட்டிக்;
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜிஎல்சி எஸ்யூவியை தீர்வு முறையிலான 4 மேட்டிக் வேரியன்ட்டிலும் வழங்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆஃப்-ரோடிங்;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி தீவிரமான ஆஃப்-ரோடிங் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
இது பல்வேறு விதமான நிலப்பரப்பு (terrain) மோட்களை கொண்டிருக்கும்.

விளம்பர யுக்தி;
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஜிஎல்சி எஸ்யூவியை பிரபலபடுத்த, எந்த விதமான பரப்பிலும் சிறந்த அனுபவங்களை ('Makes the Best of Every Ground') வழங்கும் எஸ்யூவி என விளம்பரம் செய்து வருகின்றனர்.

போட்டி;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபுள்யூ எக்ஸ்3 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஆரம்ப விலை, இந்தியாவில் 35 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம்
குண்டு துளைக்காத மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு இந்தியாவில் அறிமுகம்
மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








