மெர்சிடிஸ் ஏ-கிளாஸ், ஜிஎல்ஏ மற்றும் சிஎல்ஏ ஆகியவற்றின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் நிறுவனம், தங்களின் ஏ-கிளாஸ், ஜிஎல்ஏ மற்றும் சிஎல்ஏ ஆகிய வேரியன்ட்களின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளனர்.

யூஏஃபா யூரோ சாம்பியன்ஷிப் (UEFA Euro Championship) என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான கால்பந்து தொடர், ஃபிரான்ஸ் நாட்டில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

mercedes-benz-limited-edition-a-class-gla-cla-launched-recently

இந்த ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்களின் விலை, 25.95 லட்சம் ரூபாய் முதல் 35.26 லட்சம் ரூபாய் வரையிலான (எக்ஸ்-ஷோரூம் மும்பை) என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கிடைக்கும். அதாவது, இந்த கால்பந்து தொடர் முடியும் சமயமான ஜூலை 10-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

புதிதாக அறிமுகம் செய்யபட்ட வேரியன்ட்கள், ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் மற்றும் ஸ்போர்ட் பெடல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இப்படிதான், வழக்கமான வேரியன்ட்களில் இருந்து, இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை வேறுபடுத்தி அடையாளம் காண முடிகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் மற்றும் விளையாட்டுதுறை ஆர்வலர்களை ஈர்ப்பதற்காக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் அறிமுகம் குறித்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ரோலேன்ட் ஃபோல்ஜர் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

ஏ-கிளாஸ், ஜிஎல்ஏ மற்றும் சிஎல்ஏ ஆகிய வேரியன்ட்களின் ஸ்பெஷல் எடிஷன்கள், யூஏஃபா யூரோ 2016 தொடரின் உற்சாகத்தை இந்தியாவில் கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யபட்டுள்ளது. இது ஸ்போர்ட்டின்ஸ், டைனமிசம் மற்றும் துரு துரு தன்மை விளையாட்டு களத்திலும், விளையாட்டு களத்திற்கு வெளியேவும் கொண்டாடும் விதமாக எங்கள் கார்கள் இருக்கும் என ரோலேன்ட் ஃபோல்ஜர் தெரிவித்தார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்போர்ட் எடிஷன் - விலை விவரங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் A180 - 25.95 லட்சம் ரூபாய்
மெர்சிடிஸ் பென்ஸ் A200d - 26.96 லட்சம் ரூபாய்
மெர்சிடிஸ் பென்ஸ் CLA 200 - 33.24 லட்சம் ரூபாய்
மெர்சிடிஸ் பென்ஸ் CLA 200d - 34.25 லட்சம் ரூபாய்
மெர்சிடிஸ் பென்ஸ் GLA 200 - 34.23 லட்சம் ரூபாய்
மெர்சிடிஸ் பென்ஸ் GLA 200d - 35.26 லட்சம் ரூபாய்

More from DriveSpark

Article Published On: Tuesday, June 14, 2016, 8:05 [IST]
English summary
Mercedes-Benz has launched special edition variants of A-Class, GLA, and CLA in India to commemorate UEFA Euro Championship which kick started in France last week. These special edition models will be available for limited time only, till July 10, 2016. These new Sport Edition of A-Class, CLA and GLA celebrates the spirit of the UEFA EURO 2016 in India...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+