மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான் சொகுசு கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400...

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400...

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கும் எஸ்-கிளாஸ் ரகத்திலான கார்களின் வரிசையில் புதிய வேரியண்ட் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், 3.0 லிட்டர், ட்வின் - டர்போ, வி-6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 329 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 480 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடானின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தான், பின் பக்கத்திற்கு பவர் மட்டும் டார்க் கடத்தப்படுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், எஸ்-கிளாஸ் குடும்பத்தின் கார்களில் இருந்து வேறுபட்டு காணப்படுவவில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், முன் பகுதியில் பெரிய கிரில் மற்றும் ஒருங்கிணைக்கபட்ட டேடைம் ரன்னிங் எல்இடிக்கள் கொண்ட ஆங்குலார் ஹெட்லேம்ப்கள்

கொண்டுள்ளது.

இதன் பின்பகுதியில், இது மெல்லிய வளைந்த தோற்றம் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், ஏராளமான சொகுசு தொடர்பான அம்சங்களை கொண்டுள்ளது.

இதில் மஸாஜிங் சீட்கள், 4-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் உடைய ஏசி, ரெயின் சென்சார்கள் கொண்ட பானரமிக் சன்ரூஃப் மற்றும் ஏராளமான லெதர் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சம்;

பொழுதுபோக்கு அம்சம்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், 24 ஸ்பீக்கர்கள் மற்றும் 1520 வாட் பர்மெஸ்டர் ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கும் மெர்சிடிஸ் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள குன்றும் குழியுமாக உள்ள சாலைகளில் சென்றாலும், காரின் உள்ள பயணிக்கும் பயணியர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராத வகையில் இந்த மெர்சிடிஸ் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் பாதுகாக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. இதில், பல்வேறு வகைகளிலான 8 ஏர்பேக்குகள் உள்ளது.

மேலும், இஎஸ்பி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், டைனமிக் கார்னரிங் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் மற்றும் ஹோல்ட் பங்க்‌ஷன் உடைய ஆடாப்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், இன்ஃப்ரா ரெட் (அகச்சிவப்பு) கேமராக்கள் கொண்டுள்ளது. இதன் மூலம் இருட்டிலும் பார்க்க முடிகிறது.

மேலும், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வழக்கமான சேஃப்டி டெக்னாலஜி (பாதுகாப்பு தொழில்நுட்பங்களான) வழங்கபட்டுள்ளது. இது, வழக்கமான பார்க்கிங் பிரச்னைகளை எதிர்கொள்ள உதவுகிறது.

9-வது மாடல்;

9-வது மாடல்;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், இந்தியாவில் வழங்கப்படும் எஸ்-கிளாஸ் மாடல் கார்களின் வரிசையில் 9-வது கார் ஆகும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் உற்ப்த்தி ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது.

விலை;

விலை;

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்400 செடான், 1.31 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் ஹைதராபாத்) விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் எஸ்400 சொகுசு செடான், இந்தியாவில் மார்ச் 29-ல் அறிமுகம்

மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜியின் தகவல்கள் மற்றும் படங்கள் வெளியிடபட்டது

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2016, 16:43 [IST]
English summary
Mercedes-Benz has launched one more new variant of S-Class cars sold in India. This new Sedan is called as Mercedes-Benz S400. The New S400 is 9th S-Class model to be offered in India. It is locally assembled in India at Mercedes-Benz factory in Pune. Mercedes-Benz S400 is priced at Rs. 1.31 Crore, ex-showroom (Hyderabad). To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+