மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபுள்யூ-வை விட அதிக கார்கள் விற்றது

By Ravichandran

கடந்த மாதம் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற போட்டியாளர்களை காட்டிலும் அதிக கார்களை விற்றுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த அபார விற்பனை சாதனை குறித்த தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஜனவரியில் அதிக விற்பனை;

ஜனவரியில் அதிக விற்பனை;

ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், கடந்த ஜனவரி மாதத்தில் ஆடி மற்றும் பிஎம்டபுள்யூ சொகுசு கார் நிறுவனங்களை காட்டிலும் அதிக கார்கள் விற்றுள்ளதாக விற்பனை குறித்த புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் தேவை அதிகரிப்பு;

சீனாவில் தேவை அதிகரிப்பு;

சீனாவில் அதிகரித்து வரும் காம்பேக்ட் கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் தேவையால், மெர்சிடிஸ் பென்ஸ் வெகுவாக லாபம் அடைந்துள்ளது.

சீனாவில் மட்டும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களின் விற்பனை 52 சதவிகிதம் கூடியுள்ளது. ஆனால், பென்ஸ்ஸின் போட்டி நிறுவனங்கள் 1 இலக்க லாபத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.

எந்த மாடல்களுக்கு அதிக மவுசு?

எந்த மாடல்களுக்கு அதிக மவுசு?

இதில், மெர்சிடிஸ் சி-கிளாஸ் மற்றும் இ-கிளாஸ் சலூன் மாடல்களின் தேவை 20 சதவிகிதம் கூடியுள்ளது. ஜனவரி மாதத்தில், இந்த 2 மாடல்களில் மட்டும் 150,814 என்ற மாபெரும் எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகின.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

வாடிக்கையாளர்கள் மத்தியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதற்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

இதனால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் விற்பனையின் காரணமாக, விற்பனைகளின் அளவுகோள்கள் படி, இந்த ஆண்டின் இறுதியில் உலகின் முன்னோடி கார் நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் விளங்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதனை;

சாதனை;

2010-ஆம் ஆண்டு முதல், முதன் முறையாக, 2015-ல் தான் ஆடி நிறுவனத்தை 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி, உலக அளவில் அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் சாதனை படைத்திருந்தது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

55 பென்ஸ் இ க்ளாஸ் கார்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்க் ஆர்டர்!

லண்டனில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு குடியிருப்புகள்!

மெர்சிடிஸ் பென்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, February 22, 2016, 11:46 [IST]
English summary
Mercedes-Benz has sold more luxury cars than Audi and BMW during January 2016 period. Mercedes-Benz has benefited from increasing demand for its compact cars and SUV's in China. Mercedes-Benz recorded 52 percent jump in Car deliveries in China. In this, new C-Class and E-Class saloons has got 20 percent increase in January sales.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+