மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜியின் தகவல்கள் மற்றும் படங்கள் வெளியிடபட்டது
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி, நியூயார்க் அட்டோ ஷோவில் நிகழவிருந்த அதன் முறையான அறிமுகத்திற்கு முன்பே தகவல்கள் மற்றும் படங்கள் வெளியிடபட்டது.
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

இஞ்ஜின்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு கார், 3.0 லிட்டர், ட்வின்-டர்போ சார்ஜ்ட், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 396 பிஹெச்பியையும், 520 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு காரின் இஞ்ஜின், பவர் மற்றும் டார்க்கை, 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.
இதன் மூலம் தான், பவர் மற்றும் டார்க், 4 சக்கரங்களுக்கும் கடத்தபடுகிறது.
ஒரு கியரில் இருந்து மறு கியருக்கு இடையிலான மாற்றம், வேகமாக நடைபெறும் வகையில், இஞ்ஜினியர்கள் இதனை மாற்றி வடிவமைத்துள்ளனர்.
பவர் மற்றும் டார்க்கின் பகிர்மானம் (39:61 என்ற அளவில்) பின் பக்கத்தை நோக்கியவாறு உள்ளது.

அறிமுகம்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு காரின் முறையான அறிமுகம், நியூயார்க் ஆட்டோ ஷோவில் நிகழ உள்ளது.

திறன்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடுகிறது.

உச்சபட்ச வேகம்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு கார், உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி, ஒரு லிட்டருக்கு 12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;
மெர்சிடிஸ் இ-கிளாஸ் வேரியண்ட்களை காட்டிலும், மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு காரின் மேம்பாடுகள் ஆர்ப்பாட்டமில்லாத வகையிலேயே மேற்கொள்ளபட்டது. முன்பக்கத்தில் உள்ள பம்பரும், கிரில்லும் சற்று மேம்படுத்தபட்டுள்ளது.

ரியர்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு காரின், பின்பக்கத்தில் 2 முனைகளிலும், 2 டிப்கள் கொண்ட வழக்கமான குவாட் ஏஎம்ஜி எக்ஸ்ஹாஸ்ட்கள் பொருத்தபட்டுள்ளது.

இண்டீரியர்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு காரின் உட்பகுதியில், வழக்கமான சிகப்பு நிற தையல் வேலைப்பாடுகள் மற்றும் லெதர் ஸ்போர்ட்ஸ் சீட்கள் வழங்கபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் பாகமாக விளங்கும் டையல்களுக்கு பதிலாக 12.3 இஞ்ச் டிஎஃட்டி ஸ்கீரின்கள் பொருத்தி கொள்ளலாம்.

வகைபடுத்தல்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி, இ கிளாஸ் ரேஞ்சில், மிக உயரிய மாடலாக இருக்காது.
இ கிளாஸ் ரேஞ்சில், இ63 ஏஎம்ஜி தான் மிக உயரிய மாடலாக விளங்கும். இந்த இ63 ஏஎம்ஜி இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியாக உள்ளது.

சக்கரங்கள்;
மெர்சிடிஸ் இ43 ஏஎம்ஜி சொகுசு கார், 19-இஞ்ச் அளவிலான பிளாக் ஏஎம்ஜி 5-ஸ்போக்குகள் கொண்ட அல்லாய் சக்கரங்கள் கொண்டுள்ளது.
இதன் சக்கரங்கள், கிளாஸ்ஸியான பிளாக் நிறத்தில் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
குண்டு துளைக்காத மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு இந்தியாவில் அறிமுகம்
55 பென்ஸ் இ க்ளாஸ் கார்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்க் ஆர்டர்!
மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








