மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி காரை, மிட்சுபிஷி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ள, மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட்...

லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட்...

சமீபத்தில் தான் ஃபோர்டு நிறுவனத்தின் சார்பாக, ஃபோர்டு என்டெவர் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதையடுத்து, மிட்சுபிஷி இந்தியா நிறுவனம், மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

4 டபுள்யூடி;

4 டபுள்யூடி;

வழக்கமான மேம்பாடுகளோடு, மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-யின் ஆட்டோமேட்டிக் ட்ரிம் தற்போது 4 டபுள்யூடி தேர்வுடன் கிடைக்கிறது.

அழகியல் மேம்பாடுகள்;

அழகியல் மேம்பாடுகள்;

இந்த லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-க்கு அழகியல் மேம்பாடுகளை தவிர்த்து, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்-களுக்கே உரிய மெக்கானிக்கல் மேம்பாடுகளும் செய்யபட்டு வெளியாகிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-யின் இண்டீரியருக்கு எந்த விதமான மாற்றங்களும் செய்யபட வில்லை.

இதர மேம்பாடுகள்;

இதர மேம்பாடுகள்;

கடந்த ஜனவரியில், ஃபார்ச்சூனர் காருக்கு டொயோட்டா நிறுவனம் செய்தது போன்றே மிட்சுபிஷி நிறுவனமும் இந்த பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-க்கு டைட்டேனியம் கிரே அல்லாய்களை வழங்குகிறது.

மேலும், மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, பக்கவாடில் 3டி பஜேரோ ஸ்போர்ட் டீகேல்கள் மற்றும் பின்புறத்தில் லிமிடெட் எடிஷன் மானிக்கர் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஹெட்லைட்கள், டெய்ல் லேம்ப்கள், டோர் ஹேண்டில்கள் மற்றும் சன் வைசர்கள் ஆகியவற்றில் குரோம் பூச்சு கொண்டுள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி, கடந்த ஆண்டு பொலிவு கூட்டபட்டு வெளியிடபட்ட மாடலில் உள்ள அனைத்து மாற்றங்களும், இந்த மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-க்கு ஏற்று கொள்ளபட்டுள்ளது.

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

இந்த மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, தற்போது கிடைக்கும் டியூவல் ஷேட்கள் அல்லாது, கோல்டன் பீஃஜ் மற்றும் கிளோவ் பிரவுன் ஆகிய 2 புதிய வண்ணங்களிலும் வெளியாகிறது.

4 டபுள்யூடி ரூபத்திலும்...

4 டபுள்யூடி ரூபத்திலும்...

மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் தற்போது 4 டபுள்யூடி ரூபத்திலும் கிடைக்கிறது. முன்னதாக, இது 4X2 லே அவுட்டில் மட்டுமே கிடைத்து வந்தது.

மற்றபடி, இந்த மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி-க்கு எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யபடவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மிட்சுபிஷி லிமிடெட் எடிஷன் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபடும் போது, 178 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ள போது, 350 டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

400 கிமீ ரேஞ்ச் கொண்ட மிட்சுபிஷி எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட்!

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் அறிமுகம்!

இந்தியாவில் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் வருகை தள்ளிப்போகிறது!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, January 29, 2016, 8:30 [IST]
English summary
Mitsubishi India has introduced Limited Edition Pajero Sport SUV in India. This limited run edition is released with aesthetic updates, apart from the mechanical upgrades, which are exclusive to the automatic variant. No changes are done to the interiors of this SUV. Moreover, two new color shades are added for this limited edition model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+