மிட்சுபிஷி மான்டெரோ எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் மறு பிரவேசம் செய்யப்படும்
மிட்சுபிஷி நிறுவனம் வழங்கும் 2016 மிட்சுபிஷி மான்டெரோ எஸ்யூவி, இந்த செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் மீண்டும் மறு பிரவேசம் செய்யப்பட உள்ளது.
2016 மிட்சுபிஷி மான்டெரோ எஸ்யூவி, அதன் மறு பிரவேசம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மிட்சுபிஷி...
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் மிட்சுபிஷி நிறுவனம், தற்போதைய நிலையில், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடலை மட்டுமே வழங்கி வருகிறது.
மிட்சுபிஷி நிறுவனத்தின் விற்பனை குறைந்த அளவில் இருப்பதால் சற்று சங்கடத்தில் உள்ளது.
இந்த நிலையில், மிட்சுபிஷி நிறுவனம் தாங்கள் வழங்கும் 2016 மிட்சுபிஷி மான்டெரோ எஸ்யூவியை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விற்கப்பட உள்ள விதம்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட விதத்திலேயே இந்தியாவில் மறு பிரவேசம் செய்யப்பட உள்ளது.

இஞ்ஜின்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, 4-சிலிண்டர்கள் உடைய, 3.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 189 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 441 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.
இதன் மூலமாகவும், ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாகவும் தான், 4 சக்கரங்களுக்கும் பவர் கடத்தப்படுகிறது.

பாதுகாப்பு;
பாதுகாப்பு பொருத்த வரை, 2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, 6 ஏர் பேக்குகள் கொண்டிருக்கும்.
மேலும், 2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

கூடுதல் அம்சம்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் வெளியே, பின் கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

விலக்கி கொள்ளபட்ட மாடல்;
முன்னதாக, குறைந்த விற்பனை காரணமாக, 2014-ல் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

மேம்பாடுகள்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில், சிறிய அளவிலான டிசைன் மேம்பாடுகள் செய்யபட்டது.
இதனால், 2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி, ஆஃப்-ரோட் பிரியர்களை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிங்;
2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிக்கான புக்கிங் இந்தியாவில் முழுவதும் இருந்து விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும்.

விலை;
மறு அறிமுகம் செய்யப்படும் 2016 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியை, 67.28 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷூரூம் மகாராஷ்டிரா) விலையில் அறிமுகம் செய்யப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மேம்படுத்தப்பட்ட புதிய மிட்சுபிஷி மான்டெரோ: எச்எம் அறிமுகம்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணிக்கும் புதிய மிட்சுபிஷி எஸ்யூவி!
மிட்சுபிஷி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








