மிட்சுபிஷி நிறுவனம், ஏவுகணைகளுக்கான தொழில்நுட்பங்களை கார்களுக்கும் பயன்படுத்த திட்டம்
மிட்சுபிஷி நிறுவனம், ஏவுகணைக்கு வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் (மிஸைல் கைடன்ஸ் டெக்னாலஜி) கார்களுக்கும் பயன்படுத்த உள்ளனர்.
மிட்சுபிஷி எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் தான், மிட்சுபிஷி குழுமத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவாக செயல்படுகிறது. இந்த மிட்சுபிஷி எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் தங்களின் ஏவுகணை வழிகாட்டல் அமைப்புகளை ஆட்டோமேட்டட் கார்களிலும் ஏற்க உள்ளனர்.
ப்ளூம்பர்க் நிறுவனத்திற்கு வெளியிட்ட செய்தியில், "ஜப்பானிய படைகளுக்கு ஏவுகணைகளை வழங்கும் மிட்சுபிஷி எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன், ராணுவ பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் தொழில்நுட்பங்களை, ஆட்டோமேட்டட் கார்களுக்கும் வழங்க உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை ஆட்டோமேட்டட் கார்களில் பயன்படுத்துவதன் மூலம், அது தடைகளை உணர்ந்து கொண்டு, விபத்துகளை தடுத்து கொள்கிறது.

இதற்காக, மிட்சுபிஷி நிறுவனம், ஏவுகணைக்கு வழிகாட்டும் தொழில்நுட்பங்களாக விளங்கும் மில்லிமீட்டர்-வேவ் ரேடார்கள், சோனார், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் ஆகியவை ஆட்டோமேட்டட் கார்களுக்கும் வழங்கபட்டு, இத்தகைய கார்கள் 2020-ஆம் ஆண்டிற்குள் சாதாரன பயணியர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது" என அறிவிக்கபட்டுள்ளது.
மிட்சுபிஷி ஆட்டோமோட்டிவ் உபகரணங்கள் பிரிவின் தலைமை இஞ்ஜினியரான கட்ஸுமி அடாச்சி ப்ளூம்பர்க் நிறுவனத்திடம் பல்வேறு தகவல்களை வழங்கினார். அப்போது, "எங்களிடம் ஏற்கனவே உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும், ஒன்று சேர்த்து அவற்றை கார்களுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும். எங்களிடம் உள்ள திறன்களும், தொழில்நுட்பங்களும் வேறு எந்த போட்டி நிறுவனங்களிடமும் இல்லை" என கட்ஸுமி அடாச்சி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








