இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்ற டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் டாப் - 10 செய்திகள்!

இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்ற டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் டாப் 10 செய்திகளை இங்கே காணலாம்.

By Saravana Rajan

வாகன துறையின் நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் அன்றாடம் அள்ளி வழங்கி வருகிறது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம். இந்த நிலையில், இந்த ஆண்டில் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு, அதிக பார்வைகளை பெற்ற டாப்- 10 செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

அந்த சுவாரஸ்யங்களையும், முக்கிய நிகழ்வுகளையும் அசைபோடும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது. கூகுள் அனலிடிக்ஸ் தளத்தின் மூலமாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில் டாப் 10 செய்திகளை எடுத்து இங்கே வழங்கியிருக்கிறோம்.

10. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் அறிமுகம்

10. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் அறிமுகம்

விலை உயர்ந்த பிரிமியம் இருசக்கர வாகனங்களை பியாஜியோ கீழ் செயல்படும் அப்ரிலியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முதல்முறையாக அந்த நிறுவனம் குறைவான விலையில் அப்ரிலியா எஸ்ஆர்150 என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்கியது. மிக வித்தியசமான ஸ்டைல் மற்றும் சவாலான விலையில் வந்த இந்த செய்தி அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்றதில் 10வது இடத்தில் உள்ளது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 09. மஞ்சள் கோட்டை தாண்டியதால் வந்த வினை...

09. மஞ்சள் கோட்டை தாண்டியதால் வந்த வினை...

மங்களூரில் நானோ கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விழிப்புணர்வு பதிவாக அமைந்த இந்த செய்தியை பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்தும், எமது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்தும் கொண்டுள்ளனர். இந்த செய்தி 9வது இடத்தை பெறுகிறது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 08. மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது...

08. மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது...

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது செய்யக்கூடாத தவறுகள் என்ற தலைப்பில் வெளியான இந்த செய்தியும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்ற எமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் செய்திகளில் இதற்கு 8வது இடம்.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

07. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூ வீலர்கள்

07. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூ வீலர்கள்

கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இந்த செய்தியும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. மேலும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கும் இது பயனாக அமைந்தது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

06. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்

06. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்

இந்த செய்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆட்டோமேட்டிக் கார்களுக்கான மவுசு கூடி வரும் இவ்வேளையில் இது பயனுள்ள செய்தியாக அமைந்ததாக தொலைபேசி, இமெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக வாசகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

05. முன்னணி பைக் மாடல்களின் தமிழகத்தில் மறுவிற்பனை மதிப்பு

05. முன்னணி பைக் மாடல்களின் தமிழகத்தில் மறுவிற்பனை மதிப்பு

முன்னணி பைக் மாடல்களின் தமிழக மறுவிற்பனை மதிப்பு குறித்த இந்த செய்தியும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த செய்தி பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

04. இந்திய டிரைவிங் லைசென்ஸை அனுமதிக்கும் வெளிநாடுகள்

04. இந்திய டிரைவிங் லைசென்ஸை அனுமதிக்கும் வெளிநாடுகள்

இந்திய டிரைவிங் லைசென்ஸை அனுமதிக்கும் வெளிநாடுகள் குறித்த இந்த செய்தியும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த செய்தியை மீள்பதிவு செய்தபோதும் அதிக வரவேற்பையும், பார்வைகளையும் பெற்றது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

03. டிஜி லாக்கர் வசதி

03. டிஜி லாக்கர் வசதி

டிரைவிங் லைசென்ஸ், வாகனத்தின் ஆர்சி அட்டை போன்றவற்றை கையில் எடுத்துச் செல்வதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த மொபைல்போன் அப்ளிகேஷன் குறித்த இந்த செய்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

02. இனி டிராஃபிக் போலீஸ் வண்டிய நிறுத்தினா பதறாதீங்க...

02. இனி டிராஃபிக் போலீஸ் வண்டிய நிறுத்தினா பதறாதீங்க...

இந்த ஆண்டில் அதிக பார்வைகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த செய்தி. வாகன தணிக்கைக்காக போலீசார் வாகனத்தை நிறுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தி மூலமாக வழங்கியிருந்தோம்.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 01. மஹிந்திரா கேயூவி100 அறிமுகம்

01. மஹிந்திரா கேயூவி100 அறிமுகம்

இந்த ஆண்டில் அதிக பார்வைகளை மஹிந்திரா கேயூவி100 அறிமுகத்திற்கு வந்த செய்தியே பெற்றிருக்கிறது. குறைவான விலையில் 6 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் வந்ததால், இதற்கு அதிக மவுசு இருந்தது. விற்பனையிலும் மஹிந்திரா நிறுவனத்துக்கு ஓரளவு துணையாக இருந்து வருகிறது.

இந்த செய்தியை நீங்களும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Most Viewed DriveSpark Tamil Articles in 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X