எம்ஆர்எஃப் டயர்ஸ் மற்றும் ஐசிசி இடையே மலர்ந்த புதிய கூட்டணி

By Ravichandran

எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனமும், ஐசிசி அமைப்பும் சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனமும், ஐசிசி அல்லது இண்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அமைப்பும் 4 ஆண்டுகாலகட்டத்திற்கான சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்த 4 ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம், 2016 முதல் 2020 முதல் வரை நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும், எம்ஆர்எஃப் டயர்ஸ் குளோபல் பார்ட்னாராக (உலகளாவிய கூட்டாளியாக) விளங்கும்.

எம்ஆர்எஃப் டயர்ஸ் மற்றும் ஐசிசி-யும் சமீபத்தில் தான், ஐசிசி உலக கோப்பை 2015 தொடரை வெற்றிகரமாக நடத்தி தங்களின் கூட்டணி திறனை வெளிபடுத்தினர்.

mrf-tyres-and-icc-signs-four-year-global-partnership-deal

இந்த நிகழ்ச்சியானது, சென்னையில் உள்ள எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரான சச்சின் டெண்டுல்கர், ஐசிசி அமைப்பின் சேர்மேன் டேவிட் ரிச்சர்ட்ஸன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனம், ஐசிசி அமைப்புடனான ஆதரவை மீண்டும் 4 ஆண்டுகளுக்கு தொடர முடிவு செய்துள்ளது மிகவும் சந்தோஷம் அளிப்பதாக ஐசிசி அமைப்பின் சேர்மேன் டேவிட் ரிச்சர்ட்ஸன் தெரிவித்தார்.

mrf-tyres-and-icc-sign-four-year-global-partnership

ஐசிசி தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் அசாதாரணமான அனுபவம் வழங்கவதே அனைவரின் நோக்கமாக உள்ளது. இந்த முயற்சிகளில் எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனம், ஐசிசி அமைப்புக்கு ஆதரவு வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கள் பிராண்டின் மதிப்பையும் மேலும் கூட்டிகொள்ள அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது என டேவிட் ரிச்சர்ட்ஸன் அறிவித்தார்.

எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனம், துவக்கத்தில் இருந்தே சிறந்த அளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆதரய் வழங்கி வருகிறது. எம்ஆர்எஃப் பேஸ் ஃபவுண்டேஷன் எனப்படும் அமைப்பு மூலம் ஏராளமான பிராந்திய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் வெளிவந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
MRF Tyres and the International Cricket Council (ICC) signed global partnership deal for the duration of 4 years. After this deal, the tyre maker becomes the ICC's global partner for all events from 2016 to 2020. MRF Tyres and the ICC have recently completed a successful partnership for the ICC World Cup 2015.
Story first published: Friday, January 22, 2016, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X