கேரளாவில் 10 வருடத்திற்கு மேலாக இயங்கும் டீசல் கார்களுக்கு தடை
10 வருடத்திற்கு மேலாக இயங்கும் பழமையான டீசல் கார்களின் உபயோகம், கேரளாவின் முக்கியமான நகரங்களில் தடை செய்யப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) ஆணை வழங்கியுள்ளது.
இந்த ஆணை உடனே அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், பழைய டீசல் கார்கள், அடுத்த 30 நாட்களுக்குள் போக்குவரத்தில் இருந்து விலக்கி கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இது ஏறக்குறைய டெல்லியில் வழங்கபட்ட ஆணை போன்றதாகும். இந்த ஆணையை பின்பற்ற தவறும் பட்சத்தில், 10 வருடத்திற்கு மேலான பழைய கார்கள் மீது 10,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய விதிமுறையானது, ஜஸ்டீஸ் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான குழுவால் வழங்கபட்டுள்ளது. லாயர்ஸ் என்விரான்மென்டல் அவேர்ணஸ் ஃபோரம் (Lawyers' Environmental Awareness Forum (LEAF)) என்ற அமைப்பு மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு பின் இந்த ஆணை வழங்கபட்டுள்ளது.
சமீபத்தில் தான், கொச்சி உள்ளிட்ட கேரளாவை சேர்ந்த பல்வேறு முக்கியமான நகரங்களில், வாகனத்தில் இருந்து வெளியாகும் வாயுக்களால் அதிக மாசு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகியது.


Click it and Unblock the Notifications








