இந்தியாவின் முன்னணி கார்களின் கிராஷ் டெஸ்ட் தர மதிப்பீடு விபரம்!

By Saravana

விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நம் நாட்டு கார் மாடல்களுக்கு கிராஷ் டெஸ்ட் என்றால் நடுக்கம் ஏற்பட்டு விடுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பல கார் மாடல்கள் கிராஷ் டெஸ்ட்டுகளில் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று பல்பு வாங்கி நிற்கின்றன.

இந்த நிலையில், விற்பனையில் முன்னிலை வகிக்கும் கார் மாடல்கள் கிராஷ் டெஸ்ட்டுகளில் எவ்வளவு தர மதிப்பீட்டை பெற்றிருக்கின்றன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஏர்பேக் இல்லாத ஹூண்டாய் இயான் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தையே பெற முடிந்தது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திரங்களை பெற்றது. ஒட்டுமொத்த அளவில் அதிகபட்சமான 49 புள்ளிகளில் 20.42 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் காரான ஹூண்டாய் ஐ10 காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்ய மதிப்பீட்டை பெற்ற மாடல்தான். சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. இதுவும் குளோபல் என்சிஏபி அமைப்பால் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்.

ஹூண்டாய் எலீட் ஐ20

ஹூண்டாய் எலீட் ஐ20

யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள் கொண்ட ஹூண்டாய் எலீட் ஐ20 கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

 மாருதி ஈக்கோ

மாருதி ஈக்கோ

இந்தியாவின் மலிவு விலை எம்பிவி காரான மாருதி ஈக்கோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜ்யத்தை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களை பெற்றது.

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

குளோபல் என்சிஏபி நடத்திய சோதனையில் ஏர்பேக் இல்லாத மாருதி செலிரியோ காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜ்யத்தை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் ஒரு நட்சத்திரத்தை பெற்றது. ஏர்பேக் பொருத்தப்பட்ட மாடலை இதுவரை குளோபல் என்சிஏபி அமைப்பு சோதனை செய்யவில்லை.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் முடிசூடா மன்னனாக வலம் வரும் மாருதி ஸ்விஃப்ட் காரும் பெரியவர்களுக்காந பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தையே பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 காரும் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திர அந்தஸ்தை பெறறிருக்கிறது. இந்த காரும் ஏர்பேக் இல்லாத மாடலே கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திரங்களையும் பெற்றது.

 ரெனோ க்விட்

ரெனோ க்விட்

உங்கள் அபிமான ரெனோ க்விட் காரின் மூன்று விதமான மாடல்கள் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஏர்பேக் இல்லாத க்விட் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜ்யத்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றது. இரண்டாவது மாடல் கூடுதல் தரமிக்க பாடி பேனல்களை கொண்டது. இந்த மாடலும் பூஜ்யத்தை பெற்றாலும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் சிறப்பாக இருந்தது. மூன்றாவது மாடல் ஏர்பேக் பொருத்தப்பட்டிருந்தாலும், நட்சத்திர அந்தஸ்தை பெறாமல் தோல்வியடைந்தது.

டொயோட்டா எட்டியோஸ் லிவா

டொயோட்டா எட்டியோஸ் லிவா

இரட்டை ஏர்பேக் பொருத்தப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் லிவா கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர அந்தஸ்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

2013ம் ஆண்டு நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் இரட்டை ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர அந்தஸ்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 3 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றன.4

 ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஏர்பேக்குகள் இல்லாத போலோ கார் பூஜ்யத்தை பெற்றது. அதேநேரத்தில், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 3 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. மேலும், இரட்டை ஏர்பேக் பொருத்தப்பட்ட போலோ கார் 4 நட்சத்திர தரமதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றது.

 டாடா நானோ

டாடா நானோ

பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் டாடா நானோ கார் பூஜ்யத்தையே பெற்றது.

டட்சன் கோ

டட்சன் கோ

ஏர்பேக் இல்லாத டட்சன் கோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்யத்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.

 இந்தியாவிலும் கிராஷ் டெஸ்ட்

இந்தியாவிலும் கிராஷ் டெஸ்ட்

தற்போது கார்களுக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு தர விதிமுறைகளை கடுமையாக்கவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் மூலமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு வெகுவாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 7, 2016, 10:47 [IST]
English summary
The four-wheeler industry in India has seen numerous launches from various car manufacturers, are these models safe enough? Read through to find out the NCAP crash test ratings for some of the top selling cars in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+