2017 ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் 2017 ஹூண்டாய் சான்ட்ரோ மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

2017 ஹூண்டாய் சான்ட்ரோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

20-ஆம் ஆண்டு விழா...

20-ஆம் ஆண்டு விழா...

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் தடம் பதித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, தங்களின் பல்வேறு கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், தங்களின் ஹூண்டாய் சான்ட்ரோ மாடல் காரையும் மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

கடுமையான உரு மறைப்பு செய்யபட்டு சோதனைகள் மேற்கொண்டு வந்த நிலையில், எடுக்கபட்ட 2017 ஹூண்டாய் சான்ட்ரோவின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

2017 ஹூண்டாய் சான்ட்ரோவின் முன் பக்கம், வழக்கம் போல், ஹூண்டாய் குடும்பத்தின் முக டிசைன் போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

2017 ஹூண்டாய் சான்ட்ரோவின் பின் பக்கம், வித்தியாசமான டிசைன் கொண்டுள்ளது. இதன் பின் பக்கத்தில், டெயில்லேம்ப்கள் செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் ஜன்னலும் வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 ஹூண்டாய் சான்ட்ரோவிற்கு, ஹூண்டாய் இயான் மாடலின் 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 ஹூண்டாய் சான்ட்ரோ, இந்திய வாகன சந்தைகளில், 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.

Spy Pictures Credit ; www.carblogindia.com

English summary
South Korean Automaker Hyundai is in plans to launch the New 2017 Hyundai Santro in India soon. Hyundai is celebrating its 20th anniversary in India. 2017 Hyundai Santro was spied while testing. Spy Pics of New 2017 Hyundai Santro was revealed recently. New Santro could borrow Eon's 1.0-litre engine. It is expected to be launched in India in 2017. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark