2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

By Ravichandran

பிஎம்டபிள்யூ புதிய 3 சீரிஸ் செடான் காரை, பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள, புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கிடைக்கும் வேரிண்ட்கள்;

கிடைக்கும் வேரிண்ட்கள்;

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், 4 டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பிரஸ்டீஜ், ஸ்போர்ட் லைன், லக்சுரி லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என்ற பெயர்களில் கிடைக்கிறது.

பெட்ரோல் வேரிண்ட்கள்?

பெட்ரோல் வேரிண்ட்கள்?

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் காரின் பெட்ரோல் வேரியண்ட்கள், இந்த ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் செய்யபடும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், 2.0 லிட்டர், ட்வி டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 190 பிஹெச்பி-யையும், 400 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், நின்ற நிலையில் இருந்து 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.2 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், உச்சபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வரையிலான உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் உடையது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான், எல்ஈடி ஹெட்லட்கள், டேடைம் ரன்னிங் லைட்கள், 17-இஞ்ச் அல்லாய் வீல்கள், ஹெட்-அப் டிஸ்பிளே நேவிகேஷன், ஆட்டோமேட்டிக் பேரலல் பார்க்கிங் அசிஸ்ட் உள்ள அம்சங்கள் உள்ளது.

மேலும், இந்த செடான் பேடல் ஷிஃப்டர்ஸ், ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப், எக்கோ ப்ரோ மோட், பிரேக்-எனர்ஜி ரீஜெனரேஷன், 8.8 இஞ்ச் ஹை-ரெஸல்யூஷன் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் மொத்தம் 8 வண்னங்களில் கிடைக்கிறது.

ஆல்பைன் வைட், பிளாக் சஃபையர், பிளாட்டினம் சில்வர், ஜடோபா, இம்பீரியல் புளூ பிரில்லியண்ட் எஃபக்ட், பெல்போர்ன் ரெட், மெடிட்டெரனியன் புளூ மற்றும் எஸ்டோரில் புளூ ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

இந்திய சந்தைகளில், புதிய 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் குறித்த விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ 320டி பிரஸ்டீஜ் - 35, 90,000 லட்சம் ரூபாய்

பிஎம்டபிள்யூ 320டி ஸ்போர்ட் லைன் (நேவிகேஷன்) - 41, 50,000 லட்சம் ரூபாய்

பிஎம்டபிள்யூ 320டி லக்சுரி லைன் (நேவிகேஷன்) - 41, 50,000 லட்சம் ரூபாய்

பிஎம்டபிள்யூ 320டி எம் ஸ்போர்ட் - 44, 50,000 லட்சம் ரூபாய்

குறிப்பு; அனைத்து விலை விவரங்கள், எக்ஸ்-ஷோரூம் (அல்-இந்தியா) என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது

அரபு ஷேக்குகளுடன் போட்டி போடும் முகேஷ் அம்பானியின் மோட்டார் உலகம்

மகளுக்கு காஸ்ட்லி திருமண பரிசு வழங்கிய நடிகர் சிவராஜ்குமார்!!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
BMW has launched their New 3 Series Sedan in India. This 2016 BMW 3 Series is presented in four diesel variants - Prestige, Sport Line, Luxury Line, and M Sport. Petrol variants are to be launched later in 2016. This new 2016 BMW 3 Series is available in 8 colours. This Sedan can reach a top speed of 230km/h.
Story first published: Thursday, January 28, 2016, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X