2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது

Written By:

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்து வழங்கும் 2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியுள்ளது.

2016 ஹோண்டா பிரியோவின் இந்திய உற்பத்தி திட்ட குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ஹோண்டா பிரியோ...

2016 ஹோண்டா பிரியோ...

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கும் 2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக் மாடல், இந்தியாவில் உற்பத்தி செய்யபட்டு வருகிறது.

2016 ஹோண்டா பிரியோ காரின் முதல் தொகுப்பு, தென் ஆஃப்ரிக்காவிற்கு அனுப்பபடுகிறது.

சமீபத்தில் தான், அமேஸ் மற்றும் பிரியோ ஆகிய மாடல்கள் தென் ஆஃப்ரிக்காவில் அறிமுகம் செய்யபட்டது. தென் ஆஃப்ரிக்க சந்தைகளுக்கான கார்கள் இந்தியாவில் தயாரிக்கபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

சமீபத்தில் தான், பொலிவு கூட்டப்பட்ட 2016 ஹோண்டா பிரியோ, இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டது. தென் ஆஃப்ரிக்க சந்தைகளுக்கும் இதே மாடல் தான் வழங்கப்பட உள்ளது.

இதே மாடல் தான், இந்திய வாகன சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிறிய மாற்றங்கள்;

சிறிய மாற்றங்கள்;

2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

இதன் முன் பகுதியில், குரோம் பூச்சு கொண்ட பெரிய கிரில் வழங்கபட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஒருகிணைக்கபட்ட ஃபாக் லைட்களுடன் இதன் முன் பம்பர் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

மேலும், வைப்பர் / வாஷர் உடைய புதிய ரியர் ஸ்பாய்லர் பொருத்தபட்டுள்ளது. மேலும், ட்ரெண்டியான அல்லாய் வீல்களும் வழங்கபட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கில், புளூடூத் கனெக்டிவிட்டி உடைய மேம்படுத்தப்பட்ட என்டர்டெயின்ம்மென்ட் சிஸ்டம் உள்ளது.

மேலும், பிரிமியம் தோற்றம் வழங்கும் வகையில், முழுவதும் பிளாக் நிறத்திலான இன்டீரியர் வழங்கபட்டுள்ளது.

இதன் எம்ஐடி டிஜிட்டல் யூனிட், ஹோண்டா சிட்டி காரில் உள்ளது போன்றே இருக்கும். ஆனால், இது பெயரய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக்கின் இன்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது. ஆகவே, இதில் அதே 1.2 லிட்டர், ஐ-விடெக் பெட்ரோல் இஞ்ஜின் தான் பொருத்தப்படும்.

2016 ஹோண்டா பிரியோ ஹேட்ச்பேக், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய 2 டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கபடுகிறது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

ஹோண்டா நிறுவனம் அடுத்த தலைமுறை பிரியோ மற்றும் அமேஸ் அகியவற்றின் உற்பத்தியை துவக்கிவிட்டனர்.

இவை, தற்போதுள்ள மாடல்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

தீபாவளிக்கு வருகிறதாம் டீசல் பிரியோ.. நம்பி வெயிட் பண்ணலாமா?

பிரியோ டீசல் மாடலை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

ஹோண்டா பிரியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
2016 Honda Brio Hatchback Production has commenced in India. Honda Cars India has commenced export of its locally manufactured Brio. Facelifted Honda Brio was introduced in Indonesia. South African market also gets same model and is expected to be launched in India as well. Honda Brio will have same 1.2-litre i-VTEC petrol engine. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark