லேண்ட் ரோவரின் 2017 டிஸ்கவரி எஸ்யூவி படங்கள் வெளியீடு

By Ravichandran

லேண்ட் ரோவர் நிறுவனம், தங்களின் 2017 டிஸ்கவரி எஸ்யூவியின் படங்கள் வெளியிட்டுள்ளது. லேண்ட் ரோவர் தயாரிப்புகள், அதன் ஸ்டைலான தோற்றம் மற்றும் பல்வேறு விதமான சொகுசு அம்சங்கள் கொண்டுள்ளதால் மக்களால் அதிக அளவில் விரும்பப்படுகிறது.

லேண்ட் ரோவர் நிறுவனம், 2017 டிஸ்கவரி எஸ்யூவியை உற்பத்தி செய்து வருகிறது. இது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், லேண்ட் ரோவர் நிறுவனம், இந்த 2017 டிஸ்கவரி எஸ்யூவியின் படங்களை வெளியிட்டுள்ளது. 2017 டிஸ்கவரி எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

2017 டிஸ்கவரி எஸ்யூவி...

2017 டிஸ்கவரி எஸ்யூவி...

தற்போது படங்கள் வெளியிடப்பட்டுள்ள 2017 டிஸ்கவரி எஸ்யூவி, லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்கும் 5-ஆம் தலைமுறை டிஸ்கவரி மாடலாகும்.

முதன் முறையாக இந்த டிஸ்கவரி எஸ்யூவி, 1989 ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இது ஆட்டோமொபைல் துறையில் பெரிய புரட்சியை ஏற்ப்படுத்தியது என்றே கூறலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

படங்கள் வெளியிடப்பட்டுள்ள 2017 டிஸ்கவரி எஸ்யூவி, முறைப்படி பொதுமக்கள் பார்வைக்கு, செப்டம்பர் மாதத்தில் நடைப்பெறும் பேரிஸ் மோட்டார் ஷோவில், 28-ஆம் தேதி காட்சிப்படுத்தப்படும்.

7-சீட்டர்;

7-சீட்டர்;

இந்த 2017 டிஸ்கவரி எஸ்யூவி, 7-சீட்டர் மாடலாக இருக்கும். இதனால், இது அதிக அளவிலான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம்;

திட்டம்;

இதன் இணை மாடல்களுக்கு ஏற்றவாறு உயர்ரக தோற்றங்கள் அளிக்கும் வகையில், லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த 2017 டிஸ்கவரி எஸ்யூவி மாடலுக்கு சில ஸ்டைல் அம்சங்களை சேர்க்க உள்ளது.

ஆனாலும், லேண்ட் ரோவரின் பிற மாடல்களை போல், 2017 டிஸ்கவரி எஸ்யூவி மாடலின் ஆஃப்-ரோட் திறன்களும் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளப்படும்.

ஸ்டைல்;

ஸ்டைல்;

லேண்ட் ரோவரின் 2017 டிஸ்கவரி எஸ்யூவி மாடலின் பல்வேறு ஸ்டைல் அம்சங்கள், ஏப்ரல் 2014-ல் நியூயார்க் நகரில் டிஸ்கவரி விஷன் கான்செப்ட் மாடலில் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர், லேண்ட் ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்தது. இது சிறிய வடிவமாக இருந்தாலும், 7-சீட்டர் வசதி கொண்டிருந்தது. ரேஞ்ச் ரோவர் எவோக் மாடலை பின்னுக்கு தள்ளி, டிஸ்கவரி ஸ்போர்ட் தான் இந்நிறுவனத்தின் மிக அதிகமாக விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

சிறப்புகள்;

சிறப்புகள்;

2017 டிஸ்கவரி எஸ்யூவி, இதன் முந்தைய மாடல்களை காட்டிலும் குறைந்த எடை கொண்ட மாடலாக இருக்கும். இதனால், இது அதிக மைலேஜ் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 டிஸ்கவரி எஸ்யூவி, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

2017 டிஸ்கவரி எஸ்யூவி, ஆடி க்யூ7 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அறிமுகம்

ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி, டெஃப்எக்ஸ்போ 2016-ல் காட்சிபடுத்தபட்டது

108 டன் எடையுள்ள ரயிலை இழுத்து சென்று லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சாதனை - வீடியோ

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2016, 11:24 [IST]
English summary
Land Rover has revealed images of 2017 Discovery, which would be showcased during Paris Motor Show on 28th September. 2017 Discoverywill be fifth generation Discovery from Land Rover. Latest version is also 7-seater model, which results in spacious legroom and headroom. New Discovery will be lighter than its previous models, which increases performance and mileage. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+