இந்த ஆண்டில் அறிமுகமாகும் புதிய கார்கள்- சிறப்புத் தொகுப்பு

By Saravana

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் எக்கச்சக்கமான புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை வசியம் செய்ய காத்திருக்கின்றன.

அதில், ஒவ்வொரு ரகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கிய கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 01. டாடா ஸீக்கா

01. டாடா ஸீக்கா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரும் ரொம்பவே ஸ்பெஷலான கார் மாடல். பட்ஜெட் விலையில் சிறந்த ஹேட்ச்பேக் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஸ்டைல், வசதிகளில் டாடா மோட்டார்ஸ் பிராண்டை புதிய கோணத்தில் எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருவதோடு, இரு விதமான டிரைவிங் வசதியை தரும் தொழில்நுட்பமும் இதன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. முதலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. பின்னர், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. டட்சன் ரெடி-கோ

02. டட்சன் ரெடி-கோ

கடந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலான ரெனோ க்விட் காரின் பிளாட்ஃபார்மில் டட்சன் பிராண்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மாடல்தான் டட்சன் ரெடிகோ கார். இந்த காரில் புதிய 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்களுடன் போட்டி போடும். ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரும், இந்தியர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ள மாடல். தற்போது இந்திய மண்ணில் சாலை சோதனைகள் செய்யப்பட்டு வரும் இந்த கார் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியர்களுக்கு தரிசனம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 189 பிஎச்பி பவரை வாரி வழங்க வல்ல, 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

01. டாடா ஸீக்கா செடான்

01. டாடா ஸீக்கா செடான்

டாடா ஸீக்கா ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான மினி செடான் கார் மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டாடா ஸீக்கா அறிமுகம் செய்யப்பட்ட பின் இந்த புதிய மாடலை களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. ஸ்டைல், வசதிகளில் இந்த கார் மிகச்சிறப்பாக இருக்கும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார்களுடன் போட்டி போடும். ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஃபோக்ஸ்வேகன் அமியோ

ஃபோக்ஸ்வேகன் அமியோ

இந்திய கார் மார்க்கெட்டில் தடுமாறி வரும் ஃபோக்ஸ்வேகன், 2016ம் ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்ற முனைப்புடன் செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அதற்காக, அமியோ என்ற பெயரில் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது போலோ காரின் பூட் ரூம் சேர்க்கப்பட்ட காம்பேக்ட் செடானாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, முன்புறமும், இன்டீரியரும் போலோ காரைப் போலவே இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆப்ஷனலாக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வருகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Source

01. மஹிந்திரா கேயூவி100

01. மஹிந்திரா கேயூவி100

கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், முக்கிய விபரங்களையும் மஹிந்திரா வெளியிட்டது. தற்போது ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் இந்த புதிய மாடல் 6 பேர் அமர்ந்து செல்வதற்கு இருக்கை வசதியுடன் வருவதும், குறைந்த விலையும் எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணங்கள். அத்துடன், பெரும்பாலான மஹிந்திரா மாடல்கள் டீசல் எஞ்சின் கொண்டதாக விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மினி எஸ்யூவி 82 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 77 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

02. மாருதி விட்டாரா

02. மாருதி விட்டாரா

க்ராஸ்ஓவர் ரகத்தில் களமிறக்கப்பட்ட எஸ் க்ராஸ் கார் மாருதியின் விற்பனை இலக்கை எதிர்பார்த்தபடி பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதனைவிட சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக விட்டாரா எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி. ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு நேர் எதிராக நிலைநிறுத்தப்படும். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் தன்னிறவை கொடுக்கும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஹோண்டா பிஆர்வி

03. ஹோண்டா பிஆர்வி

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதல் 7 சீட்டர் மாடலாக வருவதுதான் இதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியிருக்கிறது. ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. சாங்யாங் டிவோலி

04. சாங்யாங் டிவோலி

சாங்யாங் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல். இந்தியாவில் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சற்றே பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும். பெட்ரோல், டீசல் மாடல்களில் பல சிறப்பான வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும். ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

01. ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்

01. ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்

கடந்த மாதம் துபாய் மோட்டார்ஸ் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பொலிவுடன் கூடிய தோற்றம், கூடுதல் வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.14.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

02. மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக்

02. மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக்

வாகனங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபட்டு வருவதை தவிர்க்க, மின்சாரத்தில் இயங்கும் கார்களை அறிமுகம் செய்வதற்கு பல நிறுவனங்கள் முயற்சிகளை தீவிரமாக்கியிருக்கின்றன. இந்த விஷயத்தில் மஹிந்திரா முன்னோடியாக விளங்குகிறது. அதன்படி, விரைவில், பேட்டரியில் இயங்கும் வெரிட்டோ எலக்ட்ரிக் காரை அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திரா இ2ஓ காரில் இருக்கும் அதே பேட்டரிதான் பயன்படுத்தப்பட இருக்கிறது. ரூ.9.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 01. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

01. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட புதிய மாடல்களின் வரவால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரெனோ டஸ்ட்டரின் புதுப்பொலிவுடன் கூடிய மாடல் அவசியமாக இருக்கிறது. முன்புற க்ரில் அமைப்பில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருக்கிறது. ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. டொயோட்டா இன்னோவா

02. டொயோட்டா இன்னோவா

இந்தியாவின் சிறந்த எம்பிவி கார் என்ற பெருமையை தக்க வைத்து வரும் டொயோட்டா இன்னோவா காரின் புதிய தலைமுறை மாடல் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பழைய மாடலைவிட வடிவத்தில் சற்று பெரிதாகியிருப்பதால், அதிக இடவசதிக்கு கியாரண்டி சொல்லும். தவிர, 100 பிஎச்பி பவரை அளிக்க வல்ல பழைய டீசல் எஞ்சினுக்கு பதிலாக, 147 பிஎச்பி பவரை அளிக்க வல்ல புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூ.10.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

03. டாடா ஹெக்ஸா

03. டாடா ஹெக்ஸா

டாடா ஆரியா எம்பிவி காரில் மாற்றங்களை செய்து எஸ்யூவி ரகத்திற்கு மேம்படுத்தியிருக்கின்றனர். மேலும், எஸ்யூவி கார்களுக்கே உரிய தனித்துவ அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் மாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரூ.13.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

01. ஃபோர்டு எண்டெவர்

01. ஃபோர்டு எண்டெவர்

முற்றிலும் புதிய டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், புதிய எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய தலைமுறைக்கு மாறியிருக்கும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வரும் 19ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஆப்ஷனலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும். செவர்லே ட்ரெயில்பிளேசர், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி

03. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி

இந்தியாவில் ஜீப் செரோக்கீ சொகுசு எஸ்யூவி மாடல் பலரின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த பிரிமியம் ரக எஸ்யூவியில் 237 பிஎச்பி பவரை அளிக்க வல்ல, 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இறக்குமதி செய்து விற்பனைக்கு வருவதால், ரூ.40 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

01. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி

01. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி

கடந்த ஆண்டு 15க்கு 15 என்ற திட்டத்தின் கீழ் 15 புதிய மாடல்களை களமிறக்கி, சொகுசு கார் மார்க்கெட்டை அதிர வைத்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டிலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அதில், இந்த ஆண்டுக்கான முதல் மாடலாக மெர்சிடிஸ் வரும் 12ந் தேதி பென்ஸ் ஜிஎல்இ450 ஏஎம்ஜி கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூபே மற்றும் எஸ்யூவி என இரண்டு தகவமைப்புகளையும் கொண்ட க்ராஸ்ஓவர் ரக மாடலில் 3.6 லிட்டர் வி6 இரட்டை டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பிஎம்டபிள்யூ எக்ஸ்6 க்ராஸ்ஓவர் மாடலுடன் போட்டி போடும். இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் இந்த புதிய மாடல் ரூ.1.25 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. புதிய ஆடி ஏ4

02. புதிய ஆடி ஏ4

மேம்படுத்தப்பட்ட இந்த புதிய ஆடி ஏ4 சொகுசு செடான் கார் அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கப்படுகிறது. நான்குவிதமான பெட்ரோல் எஞ்சின் மாடல்கள் மற்றும் மூன்று விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். ரூ.32 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஸ்கோடா சூப்பர்ப்

03. ஸ்கோடா சூப்பர்ப்

முந்தைய மாடலைவிட சற்று வடிவத்தில் பெரிதாகியிருக்கும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரும் விரைவில் இந்தியா வருகிறது. 158 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.8லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும், 138 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. டாப் வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும். ரூ.23 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்

04. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி மாடல் விரைவில் இந்தியா வர இருக்கிறது. அடிப்படையில், பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் எஸ்யூவி வெர்ஷன் என்பதால், இந்திய சொகுசு கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியிருக்கிறது. மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். ரூ.1.70 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

01. நிசான் ஜிடி-ஆர்

01. நிசான் ஜிடி-ஆர்

நீண்ட காலமாக நிசான் மனதில் இருந்து வந்த ஆசை செயல்வடிவம் பெற இருக்கிறது. ஆம், தனது ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் திட்டமிட்டு இருக்கிறது. 542 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.1.75 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. ஃபோர்டு மஸ்டாங்

02. ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்க மார்க்கெட்டில் மட்டும் கலக்கி வந்த மஸில் கார் என்ற ரகத்தில் அழைக்கப்படும் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஃபோர்டு மஸ்டாங் மிகவும் வெற்றிகரமான மாடல். இந்தநிலையில், அமெரிக்க மார்க்கெட்டையும் தாண்டி மஸில் ரக கார்கள் தற்போது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் 310 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மற்றும் 400 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் ஆப்ஷன்கள் இருக்கின்றன. வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், ரூ.50 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருக்க...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருக்க...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் முகப்பு பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் டுவிட்டர் பக்கம்

Most Read Articles
English summary
2016 will be a very promising year to any automobile enthusiast. There is a list of cars/ SUVs that will be launched this year in India, and here are a few vehicle to look out for
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X