மாருதி பலேனோ ஆர்எஸ் பெர்ஃபார்மென்ஸ் கார் தீபாவளிக்கு ரிலீஸ்!

By Saravana Rajan

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் விற்பனையில் அசத்தி வரும் மாருதி பலேனோ காரின் வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், அதன் பவர்ஃபுல்லான மாடலையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது மாருதி.

கடந்த பிப்ரவரி மாதம் நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் மாருதி பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கார் தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில், பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடைல களமிறக்க மாருதி முடிவு செய்திருக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் பிரியர்களுக்கு தனது அசாத்திய செயல்திறனால் விருந்து வைக்கப்போகும் இந்த கார் வாங்க முடிவு செய்வதற்கு ஏதுவாக சில முக்கிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

டிசைன்

டிசைன்

சாதாரண பலேனோ மாடலிலிருந்து வேறுபடுத்துவதற்கான சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய அலாய் வீல்கள், ஆர்எஸ் பேட்ஜ் போன்ற சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன், பலேனோ ஆர்எஸ் காருக்கு ஸ்பெஷலான பாடி கிட்டையும் விருப்பத்தின் பேரில் வாங்கும் வசதியையும் மாருதி வழங்க இருக்கிறது. ஆர்எஸ் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இன்டீரியரிலும் இருக்கும்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் போன்ற சக்திவாய்ந்த புதிய எஞ்சினை தனது தாய் நிறுவனமான சுஸுகியிடமிருந்து பெற்று, அதனை பலேனோ ஆர்எஸ் கார் மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மாருதி.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய பலேனோ ஆர்எஸ் காரில் 110பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல அசாத்திய திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. வெளிநாடுகளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைத்தாலும், இது இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகம் நிலவுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 175 கிமீ வேகம் வரை டாப் ஸ்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 9.5 வினாடிகளில் எட்டிவிடுமாம். இதற்கு ஏதுவான கட்டமைப்பு, சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

செயல்திறனில் அசத்தலாக இருக்கும் என்பதோடு, மைலேஜிலும் அசத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இல்லையெனினும், இந்த கார் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அதிசக்திவாய்ந்த இதன் எஞ்சினுக்கு தகுந்தவாறு, சாதாரண பலேனோ காரைவிட இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ரிவர்ஸ் கேமரா, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் ஏற்கனவே நிரந்தரமாக அம்சமாக வழங்கப்படுவதால், இந்த மாடலிலும் அவை நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பை- ஸினான் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், தானாக இயங்கும் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள். நேவிகேஷன் வசதியுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை பெற்றிருக்கும். லெதர் இருக்கைகளும் இதற்கு பிரிமியம் அந்தஸ்தை வழங்கும்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

தீபாவளி பண்டிகையையொட்டி, புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போதைய பலேனோ காரை விட சற்றே கூடுதல் விலையில் வரும் என்பது அனைவரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்புமாக உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் ஜிடி டிஎஸ்ஐ மற்றும் ஃபியட் புன்ட்டோ அபார்த் கார்களுக்கு போட்டியாக இது வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2016, 11:22 [IST]
English summary
New Maruti Baleno RS Launch In India Soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+