முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய புதிய மாருதி டிசையர் கார்!

Written By:

இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்த மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்த புதிய கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவில் வைத்து புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் அந்த காரின் ஸ்பை படங்கள் வெளிநாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், ஸ்விஃப்ட் காரின் செடான் ரக கார் மாடலான டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள மாருதி கார் ஆலை அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதி சாலைகளில் புதிய தலைமுறை டிசையர் கார் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி டிசையர் காரின் முகப்பு பெரிய மாற்றங்களை சந்தித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. பெரிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் இப்போது ஃப்ரெஷ்ஷாக வருகிறது. மேலும், எஸ் க்ராஸ் காரில் இருப்பது போன்ற பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. தயாரிப்பு நிலை மாடலிலும் இந்த புதிய க்ரில் அமைப்பு வரும் என நம்பலாம். பின்புறத்தில் டெயில் லைட் டிசைனில் மாற்றங்கள் அதிகம் தெரியவில்லை. ஆனால், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு புதுமையாக இருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

பின்புற பம்பர் டிசைன் மாற்றம் கண்டிருப்பது புலனாகிறது. இதனால், முன்பைவிட காரின் தோற்றம் கூடுதல் வசீகரம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார்களுக்கான வரையறையுடன் வரிச்சலுகை பெறும் நோக்கில், வடிவத்தில் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான காராகவே இருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

அதேநேரத்தில், உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பின் இருக்கை பயணிகளுக்கான கால் வைப்பதற்கான இடவசதி அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு, கட்டுமானம் மிகச் சிறப்பாகவும், அதேநேரத்தில் எடை குறைவான காராகவும் வருகிறது. எனவே, பாதுகாப்பில் மிகச் சிறந்த காராக மேம்படுத்தப்பட்டிருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

அத்துடன் மிக முக்கியமான விஷயம், இந்த காரின் பூட்ரூம் 330 லிட்டர் முதல் 380 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாறுதல் செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. ரெனோ க்விட் காரில் 300 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கும் நிலையில், இந்த காரில் தற்போது 316 லிட்டர் கொள்திறன் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

அடுத்து இப்போது பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். அதேநேரத்தில், சுஸுகி நிறுவனத்தின் எஸ்விஎச்எஸ் என்ற நவீன ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

இதன்மூலமாக, அதிக மைலேஜ் பெறும் கார் என்ற பெருமையை இதன் செக்மென்ட்டில் பெறும். பெட்ரோல், டீசல் என இரண்டிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தை கொடுக்க மாருதி முடிவு செய்திருக்கிறதாம்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

டாப் வேரியண்ட்டுகளில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல புதிய வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் மாருதி ஸ்விஃப்ட் காரும், அதைத்தொடர்ந்து ஆண்டு இறுதிக்குள் புதிய மாருதி டிசையர் காரும் மார்க்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, மாருதி தனது மார்க்கெட் பங்களிப்பை தொடர்ந்து தக்க வைக்கும் என்று கருதப்படுகிறது.

முக்காடு போட்டு சுற்றிய புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள்!

குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் சுஸுகி கார் ஆலையில் இந்த மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக்கட்டமாக ரூ.2,500 கோடி முதலீட்டில் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கும் இந்த கார் ஆலையில் முதலாவதாக மாருதி பலேனோ கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. உள்நாட்டு தேவை மட்டுமின்றி, இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Via: Cartoq

English summary
2017 Maruti Suzuki Swift Dzire Spied Testing For The First Time. Read in Tamil.
Story first published: Tuesday, October 25, 2016, 10:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos