புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மினி இந்தியா நிறுவனம், புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விற்கபடும் விதம்;

விற்கபடும் விதம்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட்-அப் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டிமுடிக்கபட்ட வடிவத்தில் விற்பனை செய்யபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், கூப்பர் எஸ் மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 189 பிஹெச்பியையும், 280 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான், முன் சக்கரங்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

திறன்;

திறன்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், அதிகப்படியாக மணிக்கு 233 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், ஒரு லிட்டருக்கு 14.59 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

மேற்கூரை;

மேற்கூரை;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள் காரின் மேற்கூரை, 18 நொடிகளில் மடங்கிகொள்ளும் வகையிலான அமைப்பு கொண்டுள்ளது.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் 25% அதிக பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 215 லிட்டர் என்ற அளவில் உள்ளது.

தேர்வு முறையிலான அம்சங்கள்;

தேர்வு முறையிலான அம்சங்கள்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள் காரில், 8.8 இஞ்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, ஹார்மன் கார்டன் ஹை-ஃபை ஆடியோ சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே ஆகிய வசதிகள் தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், இனி அனைத்து மினி டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;

விலை;

புதிய 2016 மினி கன்வெர்ட்டிபிள், 34.9 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடபுடைய செய்திகள்;

இதர தொடபுடைய செய்திகள்;

டோக்கியோ மோட்டர் ஷோவில் ரிலீசாகும் புதிய மினி கூப்பர் கன்வர்டிபிள் கார்!!

இந்தியாவில் மினி கூப்பர் காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

மினி பிராண்டின் அடுத்த லிட்டில் சூப்பர்ஸ்டார்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mini India has launched their 2016 Mini Convertible in India. This new convertible can accelerate from 0–100km/h in 7.1 seconds. It can achieve top speeds of upto 233km/h. 2016 Mini Convertible has a mileage of 14.59km/l. All-new MINI Convertible is sold in India in Completely Built-Up unit (CBU) form. To know more about 2016 Mini Convertible, check here...
Story first published: Thursday, March 17, 2016, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark