2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது
இந்தியாவிற்கான 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் தான் இந்த 2016 எஸ் கிராஸ் மாடலை தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையியல், ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அல்லது அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் பற்றிய கூடுதல் தகவல்களை, இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

படங்கள், வீடியோ;
மாருதி சுஸுகி நிறுவனம், அவ்வப்போது தாங்கள் தயாரிக்கும் படங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை டீஸ் செய்து வந்தனர். தற்போது, இந்த 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மாடலின் படங்கள் மற்றும் முழுமையான வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலின் உண்மையான தன்மை மற்றும் அட்வென்ச்சர் குணாம்சங்கள் வெளிப்படுகிறது.

டிசைன்;
டிசைன் பொருத்தவரை 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலில் பெரிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய கிரில், கூடுதலாக ஈர்ப்பை வழங்குகிறது.

குரோம் பூச்சு;
பிரிமியம் உணர்வு வழங்கும் வகையில், 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலில், அதிக அளவிலான குரோம் பூச்சு சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;
இஞ்ஜின் பொருத்தவரை, 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலில், மாருதி நிறுவனம் எந்த விதமான பெரிய அளவிலான மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. இது, 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;
2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ் மாடலின் 2 இஞ்ஜின்களும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

அறிமுகம்;
தற்போதைய நிலையில், 2016 மாருதி சுஸுகி எஸ் கிராஸ், ஐரோப்பிய சந்தைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். இது இந்தியாவில் பின்னர் அறிமுகம் செய்யப்படும். எனினும், இது இந்திய வாகன சந்தைகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
மாருதி எஸ் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்தோனேஷியாவில் அறிமுகம்
புதிய பெட்ரோல் இஞ்ஜினுடன் விரைவில் வெளியாகிறது மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர்
மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - முழு விபரம்


Click it and Unblock the Notifications








