மாருதி எஸ் க்ராஸ் காருக்கு ரூ.5.5 லட்சம் வரை தள்ளுபடி!

Written By:

மாருதி எஸ் க்ராஸ் கார் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று அதீத நம்பிக்கையுடன் மாருதி களமிறக்கியது. பிரத்யேக நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், போட்டியாளர்களைவிட விலை அதிகம் என்ற பேச்சு எழுந்ததன் காரணமாக, விற்பனை எதிர்பார்த்த அளவு அமையவில்லை.

இதனால், எஸ் க்ராஸ் காருக்கு தொடர்ந்து தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகிறது மாருதி. ஆனால், அந்த கட்டத்தையும் தாண்டி, தற்போது ரூ.5.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பில் தேங்கி நிற்கும் கார்களுக்கு ஒரு சில லட்சங்களை வழங்கி பார்த்திருக்கிறோம். ஆனால், விற்பனைக்கு வந்து சில மாதங்களிலேயே இந்தளவு தள்ளுபடி வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுவத்துதாக அமைந்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல், அதிக அளவில் இருப்பில் தேங்கி இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, அந்த மாடலுக்குத்தான் தற்போது ஹெவி டிஸ்கவுன்ட்டை நெக்ஸா டீலர்கள் வழங்குகின்றனர்.

தள்ளுபடி

தள்ளுபடி

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட டிடிஐஎஸ் 320 மாடலுக்கு சில நெக்ஸா டீலர்களில் ரூ.5.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறதாம். இதனால், ரூ.17.23 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படும் டாப் எண்ட் மாடலை சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மற்றொரு மாடல்

மற்றொரு மாடல்

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.3 லிட்டர் டீசல் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால், அதிகபட்சமான சலுகை 1.6 லிட்டர் டீசல் மாடலுக்குத்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எஸ் க்ராஸ் காரை வாங்குவோர் பேரம் பேசினால், சிறப்பான தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது.

குறையொன்றுமில்லை....

குறையொன்றுமில்லை....

சிறந்த அம்சங்கள் பலவற்றை கொண்டிருந்தாலும், இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவில்லை. இதற்கு விலையை அதிகமான நிர்ணயித்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, 1.6 லிட்டர் மாடலின் விலை எக்குத்தப்பாக நிர்ணயிக்கப்பட்டதே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு பொய்த்தது

எதிர்பார்ப்பு பொய்த்தது

இந்தியாவின் பல கார்களில் உயிர் கொடுத்து வரும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் நம்பகத்தன்மையை பெற்றுவிட்டது. அதேபோன்று, ஃபியட் நிறுவனத்தின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், விலையால் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. இந்த தள்ளுபடி சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும் என்பதையும் மனதில் வையுங்கள்.

 
English summary
Nexa dealerships in Mumbai are offering massive discounts of over Rs 5.5 lakh on Maruti Suzuki's S-Cross SUV.
Story first published: Friday, January 8, 2016, 10:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark