தேசிய நெடுஞ்சாலை ஆணையம், யூஏவி-க்களை உபயோகிக்க திட்டம்

By Ravichandran

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஸ்பேஸ் டெக்னாலஜி மற்றும் யூஏவி-க்களை உபயோகிக்க திட்டமிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) நாடு முழுவதும் சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும், கண்காணிக்கும் பணிகளுக்கு இஸ்ரோ மற்றும் நெக்டார் என்ற அமைப்பின் உதவியை பெற உள்ளதாக கூறியுள்ளது.

இதற்கென என்.எச்.ஏ.ஐ., இஸ்ரோ மற்றும் நெக்டார் என்ற அமைப்புடன் எம்ஓயூ என அழைக்கபடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இதன் மூலம் ஸ்பேஸ் டெக்னாலஜி (விண்வெளி தொழில்நுட்பம்) மற்றும் யூஏவி எனப்படும் ஆளில்லா ஆகாய வாகனங்களின் ஆதாயங்களை என்.எச்.ஏ.ஐ. உபயோகித்து கொள்ள முடியும்.

விரைவில் மேற்கொள்ளபட உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தகவல்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் உபயோகிக்கபட உள்ளது.

nhai-signs-mou-with-isro-and-nectar-use-uav

இப்படி தகவல்கள் பெறபடுவதன் மூலம், கட்டுமானங்களின் முன்னேற்றம், மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த முன்னேற்றம், நெடுஞ்சாலைகள் உகந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஆளில்லா ஆகாய வாகனங்களின் தொழில்நுட்பம், சாலை சொத்து மேலாண்மை, சாத்தியக்கூற்று அறிக்கை மற்றும் டிபிஆர் தயாரிப்பு, உடனடி மதிப்பீடு, தொலைதூர இடங்களிலும் தீர்வு வழங்குவது போன்ற பணிகளில் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு 24x7 மணி நேரம் அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை நிறுவ உள்ளது. திட்ட அறிக்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சாலைப் பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் இந்த தொழில்நுட்ப மையத்தில் இருந்து பெற்று கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 14, 2016, 17:35 [IST]
English summary
National Highways Authority of India is in plans to use Space Technology And UAVs. National Highways Authority of India (NHAI) has said that it would get help from ISRO and NECTAR to monitor and maintain the National Highways across India. NHAI has signed a Memorandum of Understanding (MoU) with the NECTAR and ISRO.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+