சென்னையில் நிஸான் நிறுவனத்தின் புதிய ஷோரூம் துவக்கம்

By Ravichandran

நிஸான் நிறுவனத்தின் புதிய ஷோரூம் சென்னையில் திறக்கபட்டுள்ளது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான நிஸான், ஜூபிலன்ட் நிஸான் என்ற புதிய ஷோரூமை சென்னையில் துவக்கியுள்ளது.

இந்த ஷோரூம் திறப்பு, நிஸான் நிறுவன விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜூபிலன்ட் நிஸான், நிஸான் நிறுவனம் சார்பாக சென்னையில் திறக்கபட்டுள்ள 5-வது ஷோரூம் ஆகும்.

ஜூபிலன்ட் மோட்டார்ஸ், சென்னையின் மைய பகுதியில் உள்ள மவுண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஷோரூம் சுமார் 3500 சதுர அடி என்ற அளவில் பரவியுள்ளது. இந்த ஷோரூமில் சுமார் 5 கார்கள் காட்சிபடுத்த முடியும். இந்த ஜூபிலன்ட் நிஸான் ஷோரூமை சேர்த்து தற்போது, நிஸான் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் 23 விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன.

இந்த ஜூபிலன்ட் நிஸான் ஷோரூம் திறப்பு விழாவின் போது, நிஸான் இந்தியாவின் உயர் அதிகாரி கில்லாம் சிகார்ட் பங்கேற்றார். இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். அப்போது அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

"நாங்கள் புதிய டட்சன் ரெடி-கோ காரின் அறிமுகத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறோம். ரெடி-கோ இந்திய வாகன சந்தைகளில் நுழைவு நிலை கார் செக்மன்ட்டில் போட்டி போட உள்ளது" என கில்லாம் சிகார்ட் கூறினார்.

nissan-carmaker-opened-a-new-showroom-in-chennai

"டட்சன் ரெடி-கோ, அர்பன் கிராஸ் என்ற புதிய செக்மன்ட்டையே முன் நிறுத்தி செல்கிறது. அர்பன் கிராஸ் என்பது ஹேட்ச்பேக் மற்றும் கிராஸ்ஓவர் இரண்டின் கலவை ஆகும். தற்போதைய நிலையில், எங்கள் டீலர்ஷிப் அடித்தளத்தை வளர்ப்பதும், வர்த்தக அடிப்படைகளை கூட்டுவதும், வாடிக்கையாளர்கலுக்கு இன்னும் அதிக நெருக்கமாக சென்று சேர்வதும் எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது" என கில்லாம் சிகார்ட் தெரிவித்தார்.

"இப்படி டீலர்ஷிப்கள் தொடர்ந்து அதிகரிப்பதால், இந்தியாவில் 2017-க்குள் 300 டீலர்ஷிப்கள் திறக்கும் நிஸானின் நோக்கத்தை ஒட்டி வேகமாக முன்னேறி வருகிறது. 300 டீலர்ஷிப்கள் மூலம், நாங்கள் 90% தற்போதைய மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களை கவர முடியும். இதனால், உடனடியாக விற்பனை மற்றும் சர்வீஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என கில்லாம் சிகார்ட் விவரித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 21, 2016, 11:41 [IST]
English summary
Japan based carmaker Nissan has opened new showroom in Chennai called Jubilant Nissan. This is Nissan's fifth outlet Nissan outlet in Chennai. Jubilant Motors is spread over 3500sq feet and is located on Mount Road, in heart of Chennai. This showroom shall display 5 cars. Including new dealership Jubilant Nissan, Nissan now has 23 sales and service centres in Tamil Nadu...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+