நிஸான் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலைகளும் உயர்த்தபட உள்ளது

Written By:

நிஸான் கார் உற்பத்தி நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளனர்.

சமீபத்தில் தான், 2016-17-ஆம் ஆண்டுகளுக்கான நிதி பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. இதில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ் என்ற பெயரில் புதிய வரி அறிமுகம் செய்யபட்டது.

இதனால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். எனினும், இந்த விலை உயர்வுகள் எந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்பது குறித்து, எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இந்தியா விற்கபடும் டட்சன் மாடல் கார்களின் விலைகளும் உயர்த்தபட உள்ளது. இந்த மாடல்களின் விலை சுமார் 1% உயர்த்தபடலாம் என தெரிகிறது. இது வாடிக்கையாளர்களை பெரிய அளவில் பாதிக்காது என தெரிகிறது. தற்போதைய நிலையில், டட்சன் இந்தியா, கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் ஆகிய 2 மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

நிஸான் நிறுவனம், இந்திய சந்தைகளில் தற்போது மைக்ரா, சன்னி, டெர்ரானோ எவாலியா ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதன் விலைகள், வாடிக்கையாளர்கள் தேர்ந்து எடுக்கும் மாடல்களை பொருத்து, அனைத்து மாடல்களிலும் 1 சதவிகிதம் முதல் 3 1/2 சதவிகிதம் வரை உயர்த்தபட உள்ளது. சிறிய வாகனங்கள் சிறிய அளவிலான விலையேற்றத்தை எதிர்கொள்ள உள்ளது.

nissan-india-price-hike-models-impact-2016-union-budget

யூனியன் பட்ஜெட்டின் எதிரொலியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மாருதி சுஸுகி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தன.

மேலும், 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான மதிப்பு கொண்ட மாடல்களுக்கு, சொகுசு வரி என்ற ஒரு கூடுதல் வரி விதிக்கபடுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட வாகனத்தின் மொத்த விலையில், 1% சொகுசு வரியாக வசூலிக்கபடுகிறது. அரசு மூலம் வசூலிக்கபடும்

பல்வேறு விதமான வரிகள், வாடிக்கையாளர்கள் மீதே கூடுதல் சுமையாக சுமத்தபடுகிறது.

English summary
Nissan India will soon hike prices of all their models sold in India. This price hike is done as a new tax named Infrastructure cess is levied by the Central Government. Anyhow, No information of from when these Price hikes would be increased is not declared until now. Recently, Tata Motors, Maruti Suzuki, Hyundai, and even Mercedes-Benz have declared hike in price of their models.
Story first published: Wednesday, March 9, 2016, 9:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark