ஜாக்குவாரா ஆடியா? எந்த காரில் போலாம் .... பெங்களூரில் அறிமுகமானது ஓலா லக்ஸரி சர்வீஸ்

By Meena

ஆட்டோல போனா குண்டும் குழியெல்லாம் ஏறி இறங்கனும். பேசாம சவுரியமாக கால் டாக்ஸி புக் செஞ்சு போலாங்க. கிட்டத்தட்ட இரண்டிலும் ஒரே செலவுதான் என நினைக்கும் நபரா நீங்கள்?

அப்படியானால், எல்லா கால் டேக்ஸியிலும் உங்களுக்கு சவுரியமாக பிரயாண அனுபவம் கிடைக்கிறதா? நிச்சயமாக இருக்காது.

ola taxi

இப்போது உள்ள சில கால் டாக்ஸிக்கள் ஆட்டோக்களை விட பழசாகவும், லொட லொட மாட்டு வண்டி மாதிரியாகவும் உள்ளன. நல்ல காரா அனுப்புங்கள் என்று கேட்ட பிறகும் பழைய வண்டி ஒன்று உங்களை பிக்-அப் பண்ண வந்தால் என்ன செய்வீர்கள்?

தலையெழுத்து என்று ஏறிப் பயணம் செய்ய வேண்டியதுதான் என எண்ணாதீர்கள். சொகுசான பயணத்தை விரும்புவபர்களுக்காகவே ஓலா கால் டேக்ஸி லக்ஸரி கார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவசரப்படாதீர்கள். சென்னையில் இன்னும் அந்த சேவை அறிமுகமாகவில்லை. இப்போதைக்கு பெங்களூரில் அந்த சிஸ்டத்தை ஓலா கொண்டு வந்துள்ளது.

அதாவது சொகுசுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஓலா லக்ஸரி சேவையைப் பயன்படுத்தி புக் செய்தால் உங்களை பிக்-அப் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ஜாகுவார், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட ஹை எண்ட் மாடல் கார்கள் அணிவகுத்து வரும்.

பிறகென்ன, பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் பந்தா காட்டிக் கொண்டே ஆடி காரில் ஏறிப் போகலாம்.

முதன் முதலாக இந்த சேவையை கடந்த மாதம் மும்பையில் அறிமுகப்படுத்தியது ஓலா நிறுவனம். தில்லியிலும் லக்ஸரி சேவை உள்ளது. இப்போது பெங்களூரில் அந்த முயற்சி களமிறக்கப்பட்டுள்ளது.

ஓலா லக்ஸ் எனப்படும் இந்த சர்வீஸுக்கு குறைந்தபட்சக் கட்டணம் 200 ரூபாய். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.19. அதைத் தவிர பயண நேரம் நிமிடத்துக்கு ரூ.2 என வசூலிக்கப்படுகிறது.

இந்த சேவையை புக் செய்தால் உங்களை அழைத்துச் செல்ல வரும் கால் டேக்ஸி டிரைவர் விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இதைத் தவிர காருக்குள் இலவச வை-ஃபை வசதி வழங்கப்படுகிறது.

போற இடத்துக்கு சும்மா ஜம்முன்னு போய் இறங்கனும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஓலாவின் இந்த சேவை பெங்களூரிலும் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 28, 2016, 22:53 [IST]
English summary
Now Travel In Luxury In Bangalore With Ola's New 'Lux' Service
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+