ஆட்-ஈவன் பார்முலா திட்டம், ஏப்ரல் 15-ல் அமலுக்கு வரும் என டெல்லி அரசு அறிவிப்பு

By Ravichandran

டெல்லி அரசு, டெல்லியில் இயங்கும் வாகனங்களுக்கு ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தின் படி நடைபெறும் வாகனங்களின் போக்குவரத்தின் 2-வது கட்டம், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும்.

டெல்லி தான் உலக அளவில், அதிகமான மாசு உமிழ்வு கொண்ட நகரங்களின் பட்டியலில் முன்னோடியாக் உள்ளது. இதனை குறைக்கும் முயற்சிகளில் தான், இது போன்ற புதிய திட்டங்கள் முயற்சி செய்து பார்க்கபடுகிறது.

இந்த திட்டம் நடைமுறைபடுத்தபடுவது தொடர்பாக டெல்லியின் போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, "முன்னதாக, இந்த ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தை ஃபிப்ரவரி 15 முதல் நடைமுறைக்கு கொண்டு வர விருப்பம் தெரிவித்தனர். எனினும், இந்த திட்டம் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நடைபெறும் நேரத்தில் செயல்படுத்தபட வேண்டுமா என்ற கலக்கம் மக்களிடம் நிலவி வந்தது. பெரும்பான்மையான மக்கள், இதனால், ஏராளமான இன்னல்கள்
ஏற்படும். இதனால், மக்களின் கருத்துகளையும் மனதில் கொண்டு, இந்த ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்தோம்" என கோபால் ராய் தெரிவித்தார்.

இந்த முடிவு, டெல்லி அரசின் டிராஃபிக் போலீஸ், வருவாய் துறை, டெல்லி மெட்ரோ, டிடிசி மற்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுசூழல் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூடி முடிவு எடுத்தனர். இந்த கூட்டம், ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தின் 2-வது கட்டத்தை நடைமுறை செய்வது தொடர்பாக நடத்தபட்டது.

odd-even-rule-to-return-to-delhi-region-on-15th-april

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய், அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கினார். "இந்த ஆட்-ஈவன் பார்முலா திட்டத்தினால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடாது என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. எங்கள் அரசு, பர்யாவரன் பேரூந்து சேவை திட்டத்தின் கீழ் சிஎன்ஜி காண்ட்ராக்ட் கேரேஜ் பஸ்களின் சேவைகள் தொடர்ந்து நடத்தபடும். மேலும், இதற்கான பதிவுகள், அனைத்து டிடிசி டிப்போக்களிலும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெறும்" என கோபால் ராய் கூறினார்.

மேலும், இந்த பர்மிட்கள் போக்குவரத்து துறையினர் மூலமாக 15 நாட்களுக்கு மேற்கொள்ளபடும். பள்ளி பேரூந்துகள், இந்த முறை இந்த பர்யாவரன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாது. இரண்டாவதாக, 50% இருக்கைகள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். மேலும், மார்ஷல்களும் பணியமர்த்தபடுவார்கள்" என கோபால் ராய் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2016, 7:30 [IST]
English summary
Delhi Government is in plans to implement second face of Odd-Even formula system from 15th April to 30th April. Delhi is among the most Polluted cities in the World. Government is taking steps like this to control pollution. Odd-Even formula system received good response from Public. To know more about this Odd-Even formula implementation, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+