இந்தியாவில் லைசன்ஸ் பெற்ற ஆப் அடிப்படையிலான முதல் கேப் சர்வீஸ்

By Ravichandran

ஆப் அடிப்படையிலான கேப் சர்வீஸ், இந்திய அளவில் ஏராளமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் லைசன்ஸ் பெற்ற ஆப் அடிப்படையிலான முதல் கேப் சர்வீஸ் என்ற அங்கிகாரத்தை ஓலா கேப் சர்வீஸ் பெறுகிறது.

ஓலா கேப் சர்வீஸ் தான் முதல் முறையாக ஒரு அரசு ஆணையத்திடம் இருந்து அனுமதியை முறைப்படி பெற உள்ளது. ஓலா கேப் சர்வீஸ், கர்நாடகாவின் அரசு ஆணையத்திடம் இருந்து அனுமதியை பெற உள்ளது.

ola-become-indias-first-licensed-app-based-cab-service-in-karnataka

இடி ஆட்டோ இதழில் வெளியான செய்தி படி, ஓலா நிறுவனம், கர்நாடகாவின் போக்குவரத்து தொழில்நுட்ப சட்டம் 2016 (Karnataka On-demand Transportation Technology Aggregator Rules 2016) படி எதிர்பாக்கப்படும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுபட்டவாறு உள்ளது. இதனால் கர்நாடகா மாநில போக்குவரத்து துறை ஆணையத்திடம் இருந்து முறையான லைசன்ஸ் விரைவில் பெற்றுவிடும்.

இது பற்றி கர்நாடகா மாநில போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஹெச் ஜி குமார் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். "ஓலா நிறுவனத்திற்கான லைசன்ஸ் 2 தினங்களில் தயாராகிவிடும். ஓலா நிறுவனம், அனைத்து புதிய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, 100 வாகனங்களின் முழு தகவல்களையும் வழங்கியுள்ளது. இந்த வாகனங்கள் நகர மற்றும் மாநில அளவிலான பர்மிட்கள் கொண்டதாக இருக்கும். இந்த நிறுவனம், 1 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான ரொக்கத்தை செக்யூரிட்டி டெபாசிட் ரூபத்தில் காட்டியுள்ளனர்" என ஹெச் ஜி குமார் தெரிவித்தார்.

ஓலாவின் இணை நிறுவனமான டேக்ஸிஃபார்ஷூர் (TaxiForSure) இந்த நிபந்தனைகளுக்கு இன்னும் உட்படவில்லை. ஓலா நிறுவன்ம், இந்த டேக்ஸிஃபார்ஷூர் சேவைக்கான லைசன்ஸுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை தனியாக மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகாவின் போக்குவரத்து தொழில்நுட்ப சட்டம் 2016 (Karnataka On-demand Transportation Technology Aggregator Rules 2016) படி, 2 மாதங்களுக்கு முன்பு தான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் படி, லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 100 கேப்கள் வைத்திருக்க வேண்டும். அதிக்கப்படியாக, 15,000 கார்கள் வரை வைத்திருக்கலாம்.

மேலும், இத்தகைய லைசன்ஸ் பெற விரும்பும் கேப்கள், குறுக்கீடு செய்ய முடியா ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 7, 2016, 11:00 [IST]
English summary
App-based ride aggregator service Ola will soon become first app based cab service in India, which would operate under valid licence issued by Governmental Agency in Karnataka. According to ETAuto, Ola has fulfilled the conditions set by Karnataka On-demand Transportation Technology Aggregator Rules 2016 and will soon get valid license. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+