குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க மக்கள், போலீஸாருக்கு உதவும் ஓலா

By Ravichandran

மக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை குறைக்கும் வகையில், டெல்லி போலீஸாருக்கு ஓலா நிறுவனம் உதவுகிறது. ஓலா நிறுவனம், ஆப் அடிப்படையிலான டேக்ஸி சேவை வழங்கி வருகிறது.

ஓலா நிறுவனம், 'ஹெல்ப் டெல்லி போலீஸ்' என்ற திட்டத்தை துவக்கியுள்ளனர். இந்த திட்டத்தின் படி, ஓலா நிறுவனம், டெல்லியில் பார்ட்டிகள் அதிகம் இடம்பெறும் இடங்களிலும், அதிக அளவில் மக்கள் நடமாடும் இடங்களிலும், டிஜிட்டல் ப்ரீத்தலைஸர்கள் எனப்படும் டிரைவர்களின் ரத்தத்தில் உள்ள மது அளவை கண்டு அறியும் சாதனங்களை பொருத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் ப்ரீத்தலைஸர்கள் பொருத்தபட்டுள்ள இடங்களில், டிரைவர்கள் தங்களின் ரத்தத்தில் மது அளவை பரிசோதித்து கொள்ளலாம். அப்படி அனுமதிக்கபட்ட அளவை தாண்டி, தங்களின் ரத்தத்தில் மது அளவு இருந்தால், அப்படிபட்டவர்களுக்கு ஓலா நிறுவனம், வீடு வரையிலான சவாரியை இலவசமாக வழங்குகிறது.

ola-cabs-partners-with-delhi-police-to-curb-drunken-driving

இந்த நடவடிக்கை மூலம், ஓலா நிறுவனம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது தொடர்பாகவும், சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், ஓலா நிறுவனம், டெல்லி போலீஸாருக்கும் உதவுகிறது. ஏற்கனவே, ஆட்கள் குறைப்பாட்டினால், டெல்லி போலீஸார் தேவையான ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு வழங்கும் நடவைக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மக்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதில், டெல்லி போலீஸாருக்கும் மிகுந்த இன்னல்கள் இருந்தது.

கடந்த ஆண்டில் மட்டும், மக்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்கில், 25,958 சலான்கள் வழங்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 13, 2016, 18:42 [IST]
English summary
App based taxi service Ola partnered with Delhi Police to help counter drunken driving on streets of Delhi. As per their 'Help Delhi Police' programme, Ola has installed digital breathalyzers at party hot-spots and high footfall areas. For People with over the permissable allowed blood alcohol limit, Ola provide free cab rides to home. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+