பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், மே 31-ஆம் தேதி நள்ளிரவு உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 2.58 ரூபாய், டீசல் மீது ஒரு லிட்டருக்கு 2.26 ரூபாய் என்ற அளவிற்கு விலை ஏற்றம் செய்யபட்டுள்ளது. இந்த விலை உயர்வு மே 31-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கடைசியாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், மே 16 அன்று மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு விலை 83 பைசா, டீசல் விலை 1.26 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் எக்ஸ்சேஞ்ச் விலைகளில் ஏற்படும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் குறிப்பிட்ட பங்கு வாடிக்கையாளர்கள் மீது கடத்தபட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்தது.
சர்வதேச எண்ணெய்சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களும், அமெரிக்க டாலர்-இந்திய ரூபாய் பரிவர்த்தனை ரேட் தொடர்ந்து கண்காணிக்கபடும் என்றும், அதற்கு ஏற்றவாறு எரிபொருள் விலைகள் மாற்றி அமைக்கப்படும்.
சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விற்கும விலைகள் பொருத்தும், அமெரிக்க டாலர்-இந்திய ரூபாய் பரிவர்த்தனை ரேட் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் 1-ஆம் தேதி மற்ரம் 16-ஆம் தேதிகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








