பெட்ரோல், டீசல் விலை குறைக்கபட்டுள்ளது
பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இந்தியா முழுவதும் குறைக்கபட்டுள்ளது.
தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து ஏற்றம் செய்யபட்டு வந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தற்போது தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கபட்டுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 74 பைசா என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு 1.30 ரூபாய் என்ற அளவிலும் குறைக்கபட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், பெட்ரோலின் முந்தைய விலை லிட்டருக்கு 61.87 ரூபாயாக இருந்தது. தற்போதைய விலை, லிட்டருக்கு 61.13 ரூபாயாக உள்ளது.
டெல்லியில் டீசலின் முந்தைய விலை லிட்டருக்கு 49.31 ரூபாயாக இருந்தது. தற்போதைய விலை, லிட்டருக்கு 48.01 ரூபாயாக உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக, இந்த பெட்ரோலிய பொருட்களின் விலைகளின் விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், கிடைக்கும் லாபம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகிறது என தெரிவித்தது.
பெட்ரோலிய பொருட்களின் விலைகள், 2 வாரங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








