மாருதி ஆலைகளில் கார் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள தங்களின் உற்பத்தி மையங்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர்.

ஹரியானாவின் குர்கான் மற்றும் மானேஸர் ஆகிய நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான 2 உற்பத்தி மையங்கள் உள்ளன. இங்கு ஜாட் இன மக்கள், தங்கள் சமூகத்திற்கு, வேலைவாய்ப்புகளில் இடஒதிக்கீடு கோரி கடந்த சில தினங்களாக போராட்டங்கள் செய்து வருகின்றனர். சில பகுதிகளில் இந்த போராட்டங்கள், வன்முறை மிகுந்ததாக காணப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவுகள் மெல்ல மெல்ல விளக்கி கொள்ளபட்டு வருகிறது. ஜாட் சமூகத்தினரின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைக்கபடும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், போராட்டங்கள் விளக்கி கொள்ளபட்டு வருகிறது.

இட ஒதிக்கீடு வழங்கபடும் என எழுத்துபூர்வமான உத்திரவாதம் கேட்டு, டெல்லி-அம்பாலா நெடுஞ்சாலை முடக்கபட்டது. மேலும், ரோஹ்தக், ஹிஸார் மற்றும் பிவானி ஆகிய மாவட்டங்களிலும் சிலை சாலைகளை ஜாட் மக்கள் முடக்கி கொண்டிருக்கின்றனர்.

மேலும், ஹிஸாரில் துவங்கி, டெல்லி, சண்டிகர், சிர்ஸா, சிவானி மற்றும் பிவானி ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகள் முடக்கபட்டுள்ளது. மேலும், ஹிஸார் என்ற இடத்தில் துவங்கி டெல்லி, லூதியானா, பிவானி மற்றும் லூதியானா ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் முடக்கபட்டு வருகிறது.

இத்தகைய, பல்வேறு நிலைகளில் ஆன போராட்டங்களால், சனிக்கிழமையை தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் குர்கான் மற்றும் மானேஸர் ஆகிய நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான 2 உற்பத்தி மையங்ககளில் உற்பத்தி நடைபெறவில்லை.

production-maruti-suzuki-plants-haryana-suspended-ongoing-jat-protests

இந்த இரு உற்பத்தி ஆலைகளில் இருந்து, ஒரு நாளுக்கு சுமார் 5,000 கார்கள் உற்பத்தி செய்யபடுகிறது. 2 நாட்களில் நிறுத்தபட்ட உற்பத்தி நடவடிக்கைகளால், 10,000 கார்களின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது.

இந்த போராட்டங்களின் காரங்களின் காரணமாக, உற்பத்தி ஆலைகளுக்கு வந்து சேர வேண்டிய உபகரணங்கள் சரியாக வந்து சேராமல் இருப்பதால், உற்பத்தி நடிவடிக்கைகளின் பாதிப்புகள் இன்னும் சில நாடிகளுக்கு நீடிக்கும் என செய்திகள் வெளியாகிறது.

இது குறித்து, மாருதி சுஸுகி நிர்வாகத்தின் கருத்து தெரிவித்த பெயர் வெளியிடாத செய்தி தொடர்பாளர், சுற்றி நிலவும் நிலைமைகளை கருத்தில் கொண்டு தான், உற்பத்தியை மீண்டும் தொடங்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யபடும் என கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 23, 2016, 14:20 [IST]
English summary
Production at Maruti Suzuki's two car manufacturing plants in Gurgaon and Manesar in Haryana remains suspended for days consecutively. These protests are done by the Jat community, demanding reservation in Jobs. Both these two plants put together roll out some 5,000 units of vehicles in a day.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+