சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

Written By:

பூதாகரமான விஷயங்களை கூட அனைவருக்கும் எளிய வகையில் கிடைக்கச் செய்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. பணக்காரர்களின் விஷயமாக இருந்த ஸ்மார்ட்போன்களாகட்டும், இன்டர்நெட் இணைப்பாகட்டும், அனைத்தையுமே போட்டியாளர்களைவிட பன் மடங்கு குறைவான விலையில் தந்து புரட்சியை படைத்து நிறுவனம் ரிலையன்ஸ்.

அதே வகையில், தற்போது கார் இன்ஸ்யூரன்ஸ் துறையிலும் ரிலையன்ஸ் ஒரு புரட்சிகர திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது. காருக்கு இன்ஸ்யூரன்ஸ் போடுவதற்கான நடைமுறைகள், கால விரயம் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.

ரிலையன்ஸ் கார் இன்ஸ்யூரன்ஸ்
 

இந்த நடைமுறை பிரச்னைகளை போக்கி, இருந்த இடத்திலிருந்தே சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ் பெறும் புரட்சிகர திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் ஜெனரல் கார் இன்ஸ்யூரன்ஸ் என்ற இந்த புதிய இன்ஸ்யூரன்ஸ் திட்டம் கார் உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல்போன் நம்பர், இ-மெயில் முகவரி மற்றும் உங்களது காரின் பதிவு எண்ணை ஆன்லைன் மூலமாக தந்தால் போதுமானது. உங்கள் காருக்கான இன்ஸ்யூரன்ஸ் விரைவாக உங்கள் கைக்கு கிடைத்துவிடும். வழக்கமான விண்ணப்பப்படிவங்கள், தேவையற்ற நடைமுறைகளை குறைத்து மிக எளிய வடிவத்தில் இந்த கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த புரட்சிகர ரிலையன்ஸ் ஜெனரல் கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

English summary
Revolutionary Reliance General Car Insurance Set To Simplify Car Insurance Needs.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark